நாங்குநேரி முக்கியம்.. காங்கிரஸ் வேட்பாளருக்காக களமிறங்கிய ஸ்டாலின்.. அதிரடி பிளான் ரெடி!
நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் அசத்தல் திட்டம் ஒன்றை போட்டுள்ளார் என்று தகவல்கள் வருகிறது.
Recommended Video
சென்னை: நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் அசத்தல் திட்டம் ஒன்றை போட்டுள்ளார் என்று தகவல்கள் வருகிறது.
தமிழகம் மீண்டும் இன்னொரு இடைத்தேர்தல் களத்திற்கு தயாராகிவிட்டது. வேலூர் லோக்சபா தேர்தலுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழகத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
அதன்படி தமிழகத்தில் நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் வரும் அக்டோபர் மாதம் 21ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டார்கள்.

யார் போட்டி
அதன்படி திமுக வேட்பாளர் புகழேந்தி விக்கிரவாண்டியில் போட்டியிடுகிறார். நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். இதில் நாங்குநேரியில் வெற்றிபெறுவதை திமுக முக்கியமானதாக கருதுகிறது.

ஏன் முக்கியம்
அதன்படி, தென் மாநிலங்களில் பாஜக - அதிமுக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக வலுவாக இருக்கும் மாவட்டம் கன்னியாகுமரி என்று கூறலாம். இதனால் அதன் அருகே இருக்கும் நாங்குநேரி தொகுதியில் வெற்றிபெறுவதை மிக முக்கியமான விஷயமாக திமுக கருதுகிறது.

அதிகமாக பிரச்சாரம்
இதனால் விக்கிரவாண்டி தொகுதியை விட நாங்குநேரி தொகுதியில் அதிக நாட்கள் பிரச்சாரம் செய்ய திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். ஸ்டாலின் இதற்காக ரூபி மனோகரனை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

எத்தனை நாட்கள்
அதன்படி அக்டோபா் 5, 6, 9, 10, 12, 13, 14 ,15, 16 ஆகிய நாட்களில் தொடர்ச்சியாக 9 நாட்கள் ஸ்டாலின் பிரச்சார செய்ய உள்ளார். நாங்குநேரி முழுக்க நடைபயணமாக சென்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த பிரச்சாரத்தை சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாக திமுக பார்க்கிறது.

திமுக எப்படி
அதன்படி அதிமுகவின் ஆட்சி குறித்தும், தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவது குறித்தும் ஸ்டாலின் இதில் பேசுவார் என்று கூறுகிறார்கள். இங்கு ஸ்டாலின் உடன் உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதேபோல் காங்கிரஸ் எம்பி வசந்த குமார் இங்கு ஸ்டாலின் உடன் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications