Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலைக்கு சென்ற வீட்டில் செய்யக்கூடாத காரியம் செய்த பெண்.. சொகுசு பங்களாவை பார்த்து ஆடிப்போன நெல்லை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் சுமார் 8 ஆண்டுகளாக வேலை செய்து வந்த பணிப்பெண், சிறுக சிறுக அவரது வீட்டில் இருந்து இரண்டறை கிலோ தங்க நாணயங்களை திருடிச் சென்றுள்ளார். இப்படி திருடி தனியாக ஒரு பங்களாவே கட்டியுள்ளார் அந்த பணிப்பெண். இந்த திருட்டு தற்போது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அந்த பெண்ணை பிடித்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரும் பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்களை கவனித்துக்கொள்ளவும் வீட்டு வேலைகளை செய்வதற்கும் வேலையாட்களை பணியில் அமர்த்துகிறார்கள். இப்படி வீட்டு வேலைக்கு செல்பவர்களில் பலர் நம்பிக்கைக்குரியவர்களாக விளங்கினாலும் ஒருசிலர் வேலை செய்ய வந்த இடம் என்று கூட பார்க்காமல் வீட்டில் உள்ள பணம் உள்பட மதிப்பு மிக்க பொருட்களை திருடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

nellai theft crime

அது போன்ற ஒரு சம்பவம் தான், தற்போது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றுள்ளது. அதிலும் திருடியதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு சொந்தமாக ஒரு சொகுசு பங்களா ஒன்றை கட்டியுள்ளாராம் அந்த பணிப்பெண்.. இந்த சம்பவம் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை வடக்கு ஹைகிரவுண்ட் பகுதியில் ரஞ்சன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தொழில் அதிபரான ரஞ்சனுக்கு (வயது 42) சிவகாசியில் சொந்தமாக பட்டாசு ஆலைகளும், நெல்லையில் பல்வேறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லும் ரஞ்சன், குடும்பத்தினரை கவனித்துக்கொள்ள வீட்டில் பணிப்பெண்களை நியமித்து இருந்தார்.

இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது வீட்டில் இருந்த 1.5 கோடி மதிப்பிலான 2¼ கிலோ தங்க நாணயங்கள் திருட்டு போனதை கண்டுபிடித்தார். உடனடியாக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப்பெண்கள், தோட்டக்காரர்கள், டிரைவர்கள், ஏற்கனவே வேலை பார்த்தவர்கள் என 20 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணையை தொடங்கினர்.

இதில் ரஞ்சன் வீட்டில் சுமார் 8 வருடமாக வேலை பார்த்து வரும் பாளையங்கோட்டையை சேர்ந்த பணிப்பெண் போலீசார் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது நடமாட்டத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இதில், தங்க நாணயம் திருடு போன சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த பெண்ணை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரஞ்சன் வீட்டில் திருடிய பெண், வீட்டை சுத்தம் செய்யும் போது சிறுக சிறுக தங்க நாணயங்களை திருடிச்சென்றதும், அந்த நாணயங்களை விற்ற பணத்தில் சொகுசு வீடு ஒன்றை கட்டியதையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள்.. திருடிய பணத்தில் என்ன வாங்கியிருக்கிறார்கள் என்று விசாரித்து வருகிறார்கள். திருடியவர்களிடம் இருந்து தங்க நகைகளை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+