திக்திக் நிமிடங்கள்.. நெல்லைக்கு பறந்து வந்த ஹெலிகாப்டர்.. 300 அடி ஆழ குவாரியில் போராடும் உயிர்கள்!
திருநெல்வேலி: திருநெல்வேலியில் கல்குவாரியில் பாறை விழுந்த நிலையில் அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் பகுதியில் அந்த தனியார் கல்குவாரி உள்ளது. 300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அங்கு 6 பேர் விழுந்த நிலையில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். இங்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்துள்ளது.

என்ன நடந்தது?
மேலே இருக்கும் பாறைகள் உடைந்து அப்படியே குவாரி உள்ளே விழுந்துள்ளது. மழை காரணமாக இந்த பாறைகள் உடைந்து விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் நேற்று இங்கு மீட்பு பணிகளை மேற்கொள்வது கடினம் ஆனது. திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து தற்போது ராட்சச கிரேன்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கிரேன்கள் குவாரி உள்ளே கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்
இது போக தற்போது கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளது. கிரேன்கள் மூலம் சிலரை மீட்க முடியவில்லை என்பதால் தூத்துக்குடியில் இருந்து கடலோர காவல்படை மீட்பு பணியில் இறங்கி உள்ளது. அவர்களின் ஹெலிகாப்டர் தற்போது சம்பவ இடத்தில மீட்பு பணிகளை செய்து வருகிறது. கயிறு மூலம் கடலோர காவல்படையினர் கீழ் இரக்கப்பட்டு உள்ளனர். குவாரிக்குள் கயிறு மூலம் அவர்கள் இறக்கப்பட்டு உள்ளனர்.

பாறைகள்
அங்கிருந்து பாறைகளில் சிக்கி இருக்கும் நபர்களை மீட்டு மீண்டும் ஹெலிகாப்டர் கயிறு மூலம் அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 2 பேர் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளனர். உள்ளே சிக்கி இருக்கும் இன்னொருவர் விரைவில் மீட்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மீதம் இருக்கும் மேலும் மூன்று பேரை உயிரோடு மீட்க வாய்ப்பு குறைவு என்று தீயணைப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லாரிகள்
இவர்கள் இருந்த லாரி மீது பாறை மொத்தமாக விழுந்துவிட்டது. 2 லாரிகள், 3 கிட்டாச்சிகள் பள்ளத்தில் இருந்துள்ளன. இதில் 6 ஊழியர்கள் மழைக்காக ஒதுங்கி உள்ளே இருந்துள்ளனர். கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் ஆகியோர் இருந்த கிட்டாச்சிக்கு மேலே பாறைகள் விழுந்துள்ளன. இதை பார்த்து சுதாரித்து வெளியேற வரும் முன் லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் ஆகியோர் இருந்த லாரி மீது பெரிய பாறைகள் விழுந்துள்ளன.

சிக்கல்
இதில் அவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடுமையான காயங்கள் காரணமாக இவர்கள் பலியாகிவிட்டதாக அஞ்சுவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். 300 அடி பள்ளம் என்பதால் ஊழியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட இருவர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications