அதெப்படி கோவிலுக்கு போகலாம்... மனைவியை அடித்துக்கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு
குடும்பத் தகராறில் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியை அடித்து கொலை செய்தார். காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி: சின்னச் சின்ன குடும்பத்தகராறுகள் இப்போது கொலையில் முடிகின்றன. கோவிலுக்கு தன்னிடம் சொல்லாமல் சென்று வந்த மனைவியை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்காசி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மரணமடைந்த தம்பதியரின் பெயர் பழனிச்சாமி, பிச்சம்மாள் என்பதாகும். நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள நயினாரகரம் பேரூந்து நிறுத்தம் பகுதியில் பழனிச்சாமி தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். அவரது மனைவி பிச்சம்மாள் ஊர்மேல் அழகியான் என்ற பகுதியில் சத்துணவு ஆசிரியையாக உள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும்,ஒருமகளும் உள்ளனர்.

இன்று பணிக்கு விடுமுறை எடுத்திருந்த பிச்சம்மாள் உறவினர்களோடு வெள்ளிக்கிழமை என்பதால் இலத்தூரிலுள்ள ஒத்தபனை சுடலைமாடன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு உறவினர் வாகனத்தில் திரும்பி வந்துள்ளார்.
இவர் கணவனிடம் சொல்லிவிட்டு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்தார். பழனிச்சாமிக்கு மதுப்பழக்கம் இருந்ததால் மதுப்போதையில் இருந்த அவர் மனைவி பிச்சம்மாளை தாக்கியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த பிச்சம்மாள் கணவரின் தாக்குதலில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
மனைவியை தாக்கியதில் அவர் பலியானது போதை மயக்கத்தில் இருந்த பழனிசாமிக்கு தெரிய வரவே தான் மனைவியை அடித்து கொலை செய்து விட்டோம் என்ற அச்சத்திலும் ஜெயிலுக்கு போக வேண்டுமே என்ற பதற்றத்திலும் இருந்தார். மதுப்போதையில் இருந்த பழனிச்சாமியும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தப்போது இருவரும் இறந்த நிலையில் இருப்பதைக்கண்ட உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் செல்லவே விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு உடற்க்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications