சங்கரன்கோவிலில் குடும்பத் தகராறு - போதை வெறியில் மனைவி, மகளை வெட்டி சாய்த்த குடிகாரன் போலீசில் சரண்
கணவன் மனைவி குடும்பத்தகராறுகள் எல்லாமே இப்போது கொலையில்தான் முடிகிறது. சங்கரன் கோவில் அருகே குடிப்பதை கண்டித்த மனைவி மகளை அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார் ஒருவர்.
சங்கரன்கோவில்: குடிப்பதை தட்டிக்கேட்ட மனைவி, மகளை அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார் ஒருவர் நேராக காவல் நிலையத்தில் போய் சரணடைந்துள்ளார். குடும்பத்தகராறுகள் எல்லாமே இப்போது கொலையில் முடிந்துள்ளது. நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள நெற்கட்டும் சேவலில் இந்த பதைபதைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கணவனால் வெட்டிக்கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் வெள்ளத்துரச்சி என்பதாகும். அவரது மகள் சிவரஞ்சனி. நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள நெற்கட்டும் சேவலில் கணவன் சவுந்தரபாண்டியனுடன் வசித்து வந்தார் வெள்ளத்துரச்சி. சவுந்தரபாண்டியன் தினசரியும் குடித்து விட்டு வந்து தகராறு செய்வாராம்.

இன்றும் வழக்கம் போல காலையிலேயே குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வெள்ளத்துரச்சியும் மகள் சிவரஞ்சனியும் குடிப்பதை கண்டிக்கவே, போதை வெறியில் இருந்த சவுந்தரபாண்டியன் வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி, மகளை வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில் வெள்ளத்துரச்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிய சிவரஞ்சனியை அக்கம் பக்கத்தினர் சங்கரன்கோவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவான சவுந்தரபாண்டியனை தேடி வந்தனர். இந்த நிலையில் கையில் அரிவாளுடன் புளியங்குடி காவல்நிலையத்தில் சவுந்தரபாண்டியன் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி படங்கள் உதவி : தென்காசி மாரிமுத்து
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications