Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்கள் அரசு ஊழியர்களாம்! மறுக்கப்படும் ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை! மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மாஞ்சோலை தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் அந்த மக்கள் காத்திருக்கிறார்கள். தேயிலை தோட்டத்திலிருந்து அவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கப்பட்டதால் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் சிக்கித் தவிக்கிறார்கள்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பசுமையான இடம் என்றால் அது மாஞ்சோலை பகுதியாகும். மணிமுத்தாறு அணையிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் 3500 அடி உயரத்தில் இந்த மாஞ்சோலை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்த வனப்பகுதி சிங்கம்பட்டி ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

manjolai tamil nadu

அப்போது மும்பையை சேர்ந்த தி பாம்பே டிரேடிங் கார்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்கு 1929 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை சுமார் 8000 ஏக்கர் பரப்பு கொண்ட மாஞ்சோலை வனப்பகுதியை ஜமீன் குத்தகைக்கு கொடுத்தார். இதையடுத்து கரடுமுரடாக கிடந்த மாஞ்சோலை மலைப்பகுதியை அந்த நிறுவனம் சீராக்கியது.

இதையடுத்து காபி, தேயிலை, மிளகு, ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் பயிரிட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து கூலி வேலைகளுக்கு ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களால் உருவானது தான் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியாகும். மாஞ்சோலை மட்டுமில்லாமல் அதற்கு மேல் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரவெட்டி என மொத்தம் ஐந்து இடங்களில் தேயிலை எஸ்டேட் அமைத்தது.

இந்த மாஞ்சோலையில் 6 மாதங்களுக்கு மழை பெய்யும், 6 மாதம் வெயில் இருக்கும். ஆண்டு முழுவதும் இங்கு குளிர்காலம் நிலவும். இந்த சீதோஷ்ண நிலையை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விரும்பினர். இங்கு சுமார் 2000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 450 கூலியாக வழங்கப்படுகிறது.

ஊதியம் குறைவாக இருந்தாலும் சுத்தமான காற்று, தண்ணீர், சூழல் அமைந்ததால் மன சஞ்சலம் இன்றி மக்கள் பணியாற்றி வந்தனர். சுமார் 5 தலைமுறைகளாக பணியாற்றி வருகிறார்கள். தற்போது வெறும் 536 பேர் மட்டும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜமீனுடன் போட்ட குத்தகை காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் இருக்கும் நிலையில் ஜமீன் நில ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதனால் மாஞ்சோலை பகுதி அரசு வசம் செல்லும் நிலை உள்ளது. குத்தகை காலம் முடியும் முன்னரே நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சித்த நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தை நாடியது. அப்போது குத்தகை காலம் முடியும் வரை மாஞ்சோலையில் தேயிலை தோட்டம் நடத்தவும் 2028ஆம் ஆண்டு முறைபடி அரசு நிலத்தை, கையகப்படுத்தி கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் குத்தகை காலம் முடியும் முன்னரே எஸ்டேட் தொழிலாளர்களை வெளியேற்ற அந்த நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக அவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கியது. அதற்கான பணப்பலன்களையும் கொடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. எஸ்டேட்டை விட்டு வெளியேற கடந்த ஜூன் 14 ஆம் தேதி கடைசி நாள் என்பதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு கடிதத்தில் கையெழுத்திட்டு அங்கிருந்து வெளியேறினர்.

பல்லாண்டுகளாக பணிபுரிந்து வந்த எஸ்டேட்டை விட்டு அவர்கள் வெளியேறும் போது கதறி அழுதனர்.
ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து ஆறுதல் கூறியபடியே அந்த இடத்தை விட்டு வெளியேறினர். பின்னர் எஸ்டேட்டில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். வேறு வேறு பகுதிகளை சேர்ந்தாலும் நல்லது, கெட்டதுகளில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்த நிலையில் இந்த திடீர் பிரிவு அவர்களை உலுக்கியது.

இந்த நிலையில் இதுகுறித்து மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், எங்களுக்கு தேயிலை எஸ்டேட் வேலையை விட்டால் எதுவுமே தெரியாது. திடீரென எங்களை போக சொன்னால் நாங்கள் எங்கே செல்வது? இந்த இயற்கையான சீதோஷ்ண நிலை எங்களுக்கு செட் ஆகிவிட்டது. தற்போது மலையிலிருந்து கீழே இறங்கினால் இருக்கும் வெயிலே எங்களுக்கு தாங்கவில்லை.

இதில் நாங்கள் வேலை தேடி வெளியே வந்தால் வெயில் எங்களை வாட்டி வதைக்குமே! மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 கூட எங்களுக்கு கிடையாது என்கிறார்கள். கேட்டால் நாங்கள் அரசு ஊழியர்களாம். நாங்கள் என்னத்த அரசு ஊழியர்களாக இருந்து விட்டோம் என தெரியவில்லை. அட்டை பூச்சி கடித்து ரத்தம் சிந்திதான் அந்த வேலையை செய்து வந்தோம். எனவே எங்களுக்கும் மற்ற பெண்களுக்கு வழங்குவது போல் ரூ 1000 உரிமைத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு தோட்ட தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+