ஸ்டாலினை கையைப்பிடித்து உரிமையோடு வீட்டுக்கு இழுத்துச் சென்ற பத்தமடை பரமசிவம்.. அம்பையில் நெகிழ்ச்சி
நெல்லை : 'பத்தமடை பரமசிவம் வீடு இந்த ஏரியால தான இருக்கு... வண்டிய அங்க விடு" என்று திமுக மூத்த நிர்வாகியின் வீட்டுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்றார். அவரை இன்முகத்துடன் வரவேற்ற பரமசிவம், உரிமையோடு கையை பிடித்து இழுத்து வீட்டிற்கு கூட்டி சென்றார். இந்த புகைப்படம் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ஸ்டாலின், அம்பை சட்டமன்ற தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

நலம் விசாரிப்பார்
பொதுவாக மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி தேர்தல் பிரச்சாரங்களுக்காக மற்றும் சென்னை தவிர பிற ஊர்களுக்கு நிகழ்ச்கிளுக்கு சென்றால், திமுகவின் வயதில் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கம். அத்துடன் அவர்களுடன் உரிமையாக பழகி நட்பு பாராட்டுவார்.

வண்டியை விடு
அந்த வகையில் அம்பை சட்டமன்ற தொகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்த முக ஸ்டாலின், பிரச்சாரம் செல்லும் வழியில் "பத்தமடை பரமசிவம் வீடு இந்த ஏரியால தான இருக்கு... வண்டிய அங்க விடு... பாத்துட்டு போவோம்" என்று இல்லத்திற்கு நேரில் சென்றார்

உரிமையாடு கையை பிடித்தார்
இதை பார்த்து பூரித்துப்போன பத்தமடை பரமசிவம், ஸ்டாலினின் கையை பிடித்து உரிமையோடு வீட்டிற்குள் அழைத்து சென்றார். பழைய நினைவுகளை அசைபோட்ட படி இருவரும் பேசினார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திமுகவினர் வைரல்
திமுகவினர் இந்த புகைப்படங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து,. தி.மு.க. எங்கள் குடும்பம் ... பலதரப்பட்ட மனித மனங்களின் கூட்டு கலவையான தி.மு.க. ஒரு குடும்ப கட்சி தான் என்று பதிவிட்டு வருகிறார்கள். ஸ்டாலின் மட்டுமின்றி, உதயநிதி ஸ்டாலினும் திமுகவின் மூத்த உறுப்பினர்களை சந்தித்து வருகிறார்.
-
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்?












Click it and Unblock the Notifications