எதே.. மோடி நெல்லையப்பர் சாமியா.. பாஜகவினர் வைத்த பேனரால் சர்ச்சை.. எழும் கண்டனங்கள்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்திற்கு முதல்முறையாக வர உள்ள பிரதமர் மோடியை திருநெல்வேலி நெல்லையப்பருக்கு இணையாக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டருக்கு இந்து முன்னணி, காங்கிரஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று முதல் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடி இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளைய தினம் தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பாஜக சார்பில் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார். முதல் முறையாகப் பிரதமர் மோடி நெல்லை மாவட்டத்திற்கு வர இருப்பதால் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்க பாஜகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பிரதமரை வரவேற்று மாநகரம் முழுவதும் பாஜகவினர் ஆங்காங்கே வரவேற்பு பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், நெல்லை தெற்கு மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயதுரை பாண்டியன் சார்பில் பிரதமர் மோடியை நெல்லையப்பருக்கு இணையாக சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
எங்கள் நெல்லையப்பர் சாமியே வருக வெல்க வாழ்க என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோடியை, நெல்லையப்பருக்கு இணையாக சித்தரித்த வசனங்களை அச்சிட்டிருப்பது இந்து ஆர்வலர்கள் மற்றும் சிவபக்தர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வெலியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் அமைந்துள்ளது. நெல்லையப்பர் கோயிலும், நெல்லையப்பர் சாமியும் நெல்லையின் முக்கிய ஆன்மீக அடையாளமாகக் கருதப்படுகிறது. எனவே நெல்லையப்பர் சாமியுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடிக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு சிவபக்தனாக தனது மனம் புண்பட்டிருப்பதாக கூறியுள்ளார். எனவே, காவல்துறையினர் உடனடியாக இந்த போஸ்டரை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், பாஜகவின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் இந்து முன்னணியும் இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications