தொட்டிலோடு சுவரில் மோத விட்டு கொடூரமாக கொன்ற சாமிநாதன்.. பதறி போய் ஓடி வந்த ராஜு.. ஷாக் சம்பவம்!
ஒரு வயது குழந்தையை அடித்து கொன்ற தாய், கள்ளக்காதலன் கைதானார்கள்
Recommended Video
நெல்லை: பசியால் அழுத ஒரு வயசு குழந்தையை இளம்பெண், கள்ளக்காதலனுடன் இணைந்து அடித்து கொலை செய்த சம்பவத்தில் பகீர் தகவல்கள் பல வெளியாகி உள்ளன.
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வசிப்பவர் ராஜ். இவருக்கு வயது 45. பழங்கோட்டை ஈ.பி. ஆபீசில் வேலை பார்க்கிறார். வடகாசி என்ற 35 வயது மனைவியும், தானேஷ் பிரபாகரன் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் இருந்தது.
இவர்கள் வீட்டுக்கு சாமிநாதன் என்ற பால் வியாபாரி தினமும் பால் ஊற்றுவது வழக்கம். நாளடைவில், வடகாசிக்கும், ராஜுக்கும் கள்ளக்காதல் ஆரம்பமானது.. தனிமையில் சந்தித்து அடிக்கடி ஜாலியாக இருந்திருக்கிறார்கள்.

மிரட்டல்
விஷயம் ராஜ்-க்கு தெரியவும், வடகாசியை கண்டித்தும் அவர் கேட்கவே இல்லை. தங்கள் கள்ளக்காதலை தொந்தரவு செய்தால், குழந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். சாமிநாதனுக்கு கல்யாணமாகி, குழந்தைகள் உள்ளநிலையில், கள்ளக்காதலிக்காக தனியாக ஒருவீடு வாடகைக்கு எடுத்தும் வைத்திருந்தார்.

நைட் டியூட்டி
சம்பவத்தன்று, ராஜூ நைட் டியூட்டிக்கு சென்றுவிடவும், குழந்தையை தூக்கி கொண்டு வடகாசி சாமிநாதன் வீட்டுக்கு சென்றுள்ளார். குழந்தை அழாமல் இருப்பதற்காக சேலையில் தூளி கட்டி அதில் போட்டுள்ளார். நள்ளிரவு முதல் அதிகாலை வரைகுழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறது.

வாடகை வீடு
இதில் ஆத்திரம் அடைந்த சாமிநாதன் தொட்டிலுடன் குழந்தையை சுவற்றில் தூக்கி வீசியுள்ளார். இதில்தான் குழந்தைக்கு பலத்த அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அதிகாலை ராஜு வீடு திரும்பியபோது, மனைவியை, குழந்தையையும் காணாமல், சாமி நாதனின் வாடகை வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆவேசம்
அந்த சமயத்தில்தான், பேச்சுமூச்சு இல்லாமல் குழந்தை இருப்பதை பார்த்த கள்ளக்காதல் ஜோடி, குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தது. எதிரே ஆவேசமாக வந்து கொண்டிருக்கும் ராஜுவை பார்த்துவிடவும், அங்கிருந்து குழந்தையுடன் தப்பி ஓடியது. குழந்தையை அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கி சென்று, மாடிப்படியில் இருந்து உருண்டு தவறி விழுந்து விட்டதாக பொய் சொல்லி உள்ளனர்.

கூலிப்படை
ஆனால் குழந்தை இறந்துள்ளதை அறிந்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்து கொண்ட இருவரும், அங்கிருந்து வெளியேறி விடிகாலை வரும் முதல் பஸ்ஸில் ஏறி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்குள்ள டாக்டர்கள், சுதாரித்து கொண்டதால், இந்த கள்ளக்காதல் ஜோடி சிக்கி கொண்டது. ஒருவேளை இந்த வழக்கில் சிக்காமல் போயிருந்தால், அடுத்த சில தினங்களில் ராஜுவை கூலிப்படை வைத்து இந்த ஜோடி தீர்த்து கட்டி இருக்குமாம்!
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications