தேறவே தேறாது! இதுக்கு மேல இங்க எதுக்கு? வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறிய நயினார் நாகேந்திரன்
நெல்லை: நெல்லை லோக்சபா தேர்தலில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்து வந்த நயினார் நாகேந்திரன் தற்போது பின்னடைவை சந்தித்து வருவதால் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
மக்கள் தீர்ப்பை ஏற்பதாக செய்தியாளர்களிடம் உருக்கமாகவும் பேசியிருந்தார். நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, நாம் தமிழர் சார்பில் சத்யா ஆகியோர் போட்டியிட்டனர்.

நெல்லை லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஆலங்குளம் (ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ), அம்பாசமுத்திரத்தில் (அதிமுக இசக்கி சுப்பையா) வசம் உள்ளது. பாளையங்கோட்டை (திமுக அப்துல் வஹாப்), ராதாபுரம் (சபாநாயகர் அப்பாவு - திமுக) ஆகியவை திமுக வசம் உள்ளது. நாங்குநேரியில் (காங்கிரஸ் ரூபி மனோகரன்) மட்டும் காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளார். நெல்லை தொகுதி எம்எல்ஏவாக நயினார் நாகேந்திரன் உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவாக உள்ளார். இந்த நிலையில் நெல்லைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்து பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சில நிமிடங்களில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வந்தார்.
ஆனால் உடனே டிரெண்ட் மாறத் தொடங்கியது. அதன் பிறகு ராபர்ட் புரூஸ் 2,10,629 வாக்குகளையும் நயினார் நாகேந்திரன் 1,44,968 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் என்பது 65,661 ஆகும். 6 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் எப்படியும் வெற்றிக் கிடைக்காது என கருதிய நயினார் நாகேந்திரன் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் என்றார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications