Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கப்பல் வேலைக்கு ஆசைப்பட்ட நாங்குநேரி சின்னதுரை.. கலெக்டராக விரும்பிய தங்கை! இப்படி வெட்டிட்டாங்களே

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நாங்குநேரியில் சாதி வெறியர்களால் வெட்டப்பட்ட மாணவன் சின்னதுரை கப்பலில் வேலை செய்ய விரும்பியுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளியில் சின்னத்துரை என்ற பட்டியலின மாணவர் பள்ளியில் சக மாணவர்கள் சிலரால் சாதி ரீதியாக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வந்து இருக்கிறார். அது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் அவர் புகார் அளித்துள்ளார். அதன் காரணமாக தலைமை ஆசிரியர் அந்த மாணவர்களை அழைத்து கண்டித்து உள்ளார்.

 Nanguneri attacked school student Chinnadurai interested to work in Ship

இதனால் கோபமடைந்த ஆதிக்க சாதி மாணவர்கள் 6 பேர் சின்னதுரை வீட்டுக்கு சென்று பயங்கர ஆயுதங்களுடன் அவரை சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க முயன்ற அவரது தங்கை சந்திரா செல்வி என்ற 13 வயது சிறுமிக்கும் வெட்டி விழுந்துள்ளது. சின்னதுரையின் தாத்தாவை அவர்கள் கீழே தள்ளி விட்டதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர் மாரடைப்பில் இறந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னதுரைக்கும் அவரது தங்கைக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வரும். பல்வேறு கட்சியினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

பள்ளிகளில் நிலவும் சாதிய கொடுமைகளை கண்டித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன் நேரில் சென்று சிறுவன் சின்னதுரையையும் அவரது தங்கையையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் அங்கு நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளை விசாரித்தார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட விரிவான அறிக்கையில், "நாங்குனேரியில் சின்னத்துரை(17) மற்றும் அவர் தங்கை(13) மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்கியது ஜாதிவெறி தலைக்கேறிய ஆதிக்கஜாதி மாணவர்கள். சின்னத்துரைக்கு கப்பலில் பணி புரிய வேண்டும் என்ற லட்சியம்.

அவர் தங்கை சந்திராவிற்கு கலெக்டராக வேண்டுமாம். இது போன்ற பிஞ்சுகளின் கனவு நனவாக அந்த பகுதி வன்கொடுமை பகுதியாக அறிவிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் 24 மணிநேரமும் கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஜாதிவெறி மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவதுடன் அவர்களின் பெற்றோர் மற்றும் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் எனவும் கண்டறிந்து சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

அந்த தங்கை தன் உயிருக்கும் அஞ்சாது தன் அண்ணன் உயிரை காப்பாற்றியிருக்கிறாள். அதனால் அவளது இடதுகை மற்றும் வலது கை விரல்களில் வெட்டுக்காயங்கள். அவள் தடுத்திருக்காவிட்டால் சின்னத்துரை கழுத்தில் அரிவாள் இறங்கியிருக்கும். சின்னத்துரைக்கும் அவர் தங்கைக்கும் உயர்தர நவீன சிகிச்சையை அரசே அளிக்கவேண்டும்.

மேலும் அவர்களின் கல்விக்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். அந்த பகுதியின் அத்தியாவசிய தேவைகளை உடனே பூர்த்தி செய்ய வழிவகை செய்யவேண்டும். கோயில் திருவிழாக்களில் பெருந்தெரு மக்கள் கலந்துகொள்ளுமாறு அரசு ஆவன செய்யவேண்டும். ஜாதிவெறி மாணவர்கள் ஒரு தேர்ந்த கூலிப்படை போல 2 அடி அரிவாளால் அந்த பிஞ்சுகள் மேல் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறித் தாக்குதலை பார்த்த அதிர்ச்சியில் 55 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.

அவருக்கு இரண்டும் மகள்கள் ஒரு மகன். அந்த குடும்பம் தற்போது குடும்பத்தலைவரை இழந்துள்ளது. அவர்களுக்கு உரிய இழப்பீடும். பட்டதாரி மகளுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். இந்த விபரீதத்தை ஆரம்பத்திலிருந்தே மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளும் தமிழ்நாடு அரசு பெருந்தெரு மக்களின் பிரச்சனைகளை களைந்து சமத்துவத்தை நிச்சயம் நிலைநாட்டும் என நம்புவோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+