திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்குநேரியை கைப்பற்றியது அதிமுக.. காங்.தோல்வி.. 32,333 வாக்கு வித்தியாசத்தில் நாராயணன் வெற்றி

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரியை கைப்பற்றியது அதிமுக..காங்கிரஸ் தோல்வி | aiadmk candidate reddiarpatti won in nanguneri

    திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரை விட 32333 வாக்குகள்அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி எனஇரு தொகுதியையும் அதிமுக கைப்பற்றி உள்ளது.

    நாங்குநேரி தொகுதியில் முன்னதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் எம்எல்ஏவாக இருந்தார். இவர் கன்னியாகுமரி எம்பியானதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி வி நாராயணன் போட்டியிட்டார்.

    கடந்த 21ம் தேதி நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் தபால் வாக்கு தொடங்கி தொடர்ந்து அதிமுகவே முன்னிலை வகித்தது. அதிமுக தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தது

    திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. உள்ளாட்சி தேர்தல் சீக்கிரம் வருமா..!திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. உள்ளாட்சி தேர்தல் சீக்கிரம் வருமா..!

    அதிமுக முன்னிலை

    அதிமுக முன்னிலை

    காலை 9.30மணி நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 4737 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 2865 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தனர். இதன் மூலம் 1872 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன் முன்னிலை வகித்தார். அதன்பிறகு அதிமுக வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன் 9327 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 6353 வாக்குகளும் பெற்று இருந்தனர். இதன் மூலம் அதிமுக வேட்பாளர் 2974 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்

    காங். வேட்பாளர்

    காங். வேட்பாளர்

    4வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 7802 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உயர்ந்தார். அதன்பிறகு ஒவ்வொரு சுற்றாக வாக்குகள்அதிகரித்த நிலையில் 9வது சுற்றில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் முன்னிலை பெற்றார். இந்த சுற்றில் ரூபி மனோகரன் 4591 வாக்குகளும், ரெட்டியார் பட்டி நாராயணன் 3161 வாக்குகள் பெற்று இருந்தார். இதன் மூலம் இந்த சுற்றில் மட்டும் 1400வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். ஆனால் அதிமுக வேட்பாளர் மொத்த வாக்கு அடிப்படையில் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.

    நாராயணன் முன்னிலை

    நாராயணன் முன்னிலை

    11 வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன் 52155 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 35706 வாக்குகளும் பெற்று இருந்தனர். இதன் மூலம் அதிமுக வேட்பாளர் 16449 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைக்கு உயர்ந்தார். 12 சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனைவிட 16551 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைக்கு உயர்ந்தார்.

    அதிமுக வெற்றி முகம்

    அதிமுக வெற்றி முகம்

    இப்படி படிப்டியாக உயர்ந்த நிலையில் 19 வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன் 85567 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 56535 வாக்குகளும் பெற்று இருந்தார்கள். இதன் மூலம் அதிமுக வேட்பாளர் நாராயணன் 29029 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.

    நாங்குநேரியில் வெற்றி

    நாங்குநேரியில் வெற்றி

    கடைசியில் 23 வது சுற்று முடிந்த நிலையில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன் 94562 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 62229 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் அதிமுக வேட்பாளர் நாராயணன் 32333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் நாங்குநேரி தேர்தலில் 2662 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார்.

    English summary
    Nanguneri, Vikravandi By Election Results 2019 LIVE: aiadmk candidate reddiarpatti v narayanan leading in nanguneri, congress candidate trailing
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X