ஸ்கூல் யூனிபார்மில் இருவர்.. மாணவி கழுத்தில் தாலி கட்டும் மாணவன்.. மக்களை அதிர வைக்கும் வீடியோ..!
பள்ளி மாணவர்களின் வீடியோ குறித்த விசாரணை நடந்து வருகிது
Recommended Video
திருநெல்வேலி: ஸ்கூல் யூனிபார்மில் உள்ளனர் 2 பேரும்.. ஒரு செயினை எடுத்து அந்த மாணவியின் கழுத்தில் மாணவன் தாலி கட்டுகிறார்... அதை மாணவி வெட்கத்துடன் தலைகுனிந்து வாங்கி கொள்கிறார்.. இப்படி ஒரு வீடியோ நடித்து.. வெளியாகி தமிழக மக்களுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
செல்போன் வந்தாலும் வந்தது, அதனால் ஏற்படும் கலாச்சார சீரழிவுகளை சொல்ல முடிவதில்லை.. எத்தனையோ நன்மைகள் இருந்தாலும், அந்த செல்போனை தவறாகவே பெரும்பாலான இளைஞர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இது கொலை, பாலியல் பலாத்காரம், வன்முறை முதல் கலாச்சார நாசம் வரை வந்து விபரீதத்தில் நிற்கிறது.. சில தினங்களாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..

கழுத்தில் தாலி
அந்த வீடியோவில் 2 பேர் உள்ளனர்.. ஒரு மாணவி, ஒரு மாணவன்.. இருவருமே ஸ்கூல் யூனிபார்மில் உள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியை சேர்ந்தவர்கள்... ஒரு கோயிலுக்கு வெளியே வளாகத்தில் நின்று கொண்டு.. மாணவிக்கு மாணவன் கழுத்தில் தாலி கட்டுவது போல் நடித்து ஒரு செயினை அணிவிக்கிறார்... அந்த மாணவியும் அந்த செயினை தாலி போல நினைத்து மணப்பெண்ணை போல வெட்கி தலைகுனிந்து ஏற்று கொள்கிறார்.

வீடியோ
இவர்களுடன் பிற மாணவ - மாணவிகளும் உள்ளனர். இதை பார்க்கும்போது நமக்குதான் வெட்கமாக இருக்கிறது... மொத்தம் 22 செகண்ட் அந்த வீடியோ ஓடுகிறது.. தாலி கட்டும் சீனில் பின்னணி இசையாக ஒரு சினிமா பாட்டும் ஓடுகிறது. யாரோ வீடியோ எடுத்து, இதை எடிட் செய்து பதிவிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ பெரும் வைரலாகி தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்துவருகிறது.

யார் இவர்கள்?
எதற்காக இந்த தாலி கட்டும் சீன்? எதற்காக பின்னணி சினிமா பாட்டு? யார் செய்த வேலை இது? எடிட் செய்து வீடியோ வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இந்த மாணவ, மாணவிகள் எந்த ஸ்கூலில் படிக்கிறார்கள், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற பல சந்தேகங்கள் எழுகின்றன. இந்த வீடியோ தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணையை கையில் எடுத்துள்ளது.

விபரீதம்
டிக்டாக் வீடியோவின் விபரீதத்தை நினைத்து கவலைப்படுவதா, படிக்கிற வயதில் இந்த பிள்ளைகள் தாலியை வைத்து விளையாடி கொண்டிருப்பதை நினைத்து வேதனைப்படுவதா, இவர்களின் எதிர்காலம் என்னாகும் என பயப்படுவதா என்று தெரியவில்லை. ஆனால் தறி கெட்டு போய் கொண்டிருக்கிறது இளைய சமுதாயம்.. முதலில் பெற்றவர்களும், அடுத்து ஆசிரியர்களும்தான் இந்த பிள்ளைகளை கவனித்து.. கண்காணித்து.. காப்பாற்ற வேண்டும்!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications