ஜாடி முதல் பம்பரம் வரை மரங்களால் ஆன கைவினை பொருட்கள் உற்பத்தி.. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
நெல்லை: மரங்களை கொண்டு செய்த கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வுகளை நடத்தினார்.
Recommended Video
பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப் பொருட்களால் செய்யப்படும் கைவினை பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்துகிறது.
மேலும் கைவினை பொருட்கள் சேதமடைந்து குப்பைக்கு சென்றால் அவரை மண்ணில் புதைந்து மண் வளத்திற்கும் நிலத்தடி நீருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

பிளாஸ்டிக் பயன்பாடு
இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ளுமாறும் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பிளாஸ்ட்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மரம் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

மரங்கள்
மேலும் மரங்களை கொண்டு செய்யப்படும் கைவினை பொருட்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இந்த மரங்கள் மூலம் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. இது அரசு சார்பில் பல்வேறு இடங்களில் ஊக்குவிக்கப்படுகிறது. சில இடங்களில் குடிசைத் தொழிலாகவும் செய்யப்படுகிறது.

என்னென்ன பொருட்கள்
அந்த வகையில் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், சுப்ரமணியபுரம் பகுதிகளில் மரங்களில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள், சிறுகுழந்தைகள் உறங்குவதற்கு தேவையான தொட்டில் கம்புகள், பம்பரம் மரத்திலான ஜாடி, ஊதுபத்தி ஸ்டாண்ட், தெய்வங்களின் உருவங்கள் என பலவிதமான கைவினைப் பொருட்கள் இப்பகுதியில் உற்பத்தி செய்து வருகின்றனர்.

மானியங்கள்
மேலும் இவர்களுக்கு போதிய மானியங்கள், தேவையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளதா என நெல்லை மாவட்ட ஆட்சியர் இப்பகுதியிலுள்ள 50-க்கும் மேற்பட்ட சிறுசிறு தொழிற்சாலைகளை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆய்வின் நிறைவில் அவர்களுக்கு தேவையான மானியமும் பயிற்சியும் கிடைப்பதற்கு வழிவகை செய்கிறேன் என்று உறுதி கூறினார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications