Nellai Kavin: அந்த அம்மாவை கைது பண்ணனும்.. அதுவரை என் மகனின் உடலை வாங்க மாட்டேன்! நெல்லை கவின் தந்தை
தூத்துக்குடி: நெல்லை ஆணவப் படுகொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் அம்மாவை கைது செய்யும் வரை எனது மகனின் உடலை வாங்க மாட்டேன் என்று கவினின் தந்தை செல்வகணேஷ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி எம்பி கனிமொழி நேரில் சந்தித்து கவினின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நிலையில், கனிமொழியிடமும் இதே கோரிக்கையை முன் வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் என்பவர் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பெண் சித்த மருத்துவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் தம்பி சுர்ஜித் கவினை வெட்டி படுகொலை செய்தார்.

இதன்பின் சுர்ஜித் நேரடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சுர்ஜித்தின் தாய் கிருஷ்ண குமாரி மற்றும் தந்தை சரவணன் ஆகியோரின் பெயர்களை எஃப்ஐஆரில் சேர்த்தனர். இவர்கள் இருவரும் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில், இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நெல்லை கவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றுவதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு கொலையாளி சுர்ஜித் தந்தை சரவணனை போலீசார் கைது செய்தனர். உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனையும் செய்தனர்.
இதனிடையே படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்காமல் அவரின் குடும்பத்தினர் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5 நாட்களாகியும் இதுவரை உடலை வாங்கவில்லை. தொடர்ந்து தூத்துக்குடி எம்பி கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கவினின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கவினின் தந்தை சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், கனிமொழி தரப்பில் குற்றவாளிகள் யாரையும் தப்பவிட மாட்டோம். அவரின் தந்தையைக் கைது செய்துவிட்டோம். தாயையும் கைது செய்துவிடுவோம் என்று கூறினார்கள். நான் ஒரே வார்த்தையில், சுர்ஜித் தாய் கைது செய்யப்பட வேண்டும் என்று மட்டுமே கூறினேன். அதுமட்டும் தான் எங்களின் கோரிக்கை.
அதுவரை என் மகனின் உடலை வாங்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கவினின் காதலி சுபாஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கவின் கொலைக்கும் என் பெற்றோருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இதனை இத்துடன் விட்டுவிடுங்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications