"சபாஷ்.. இதுதான் போலீஸ்".. போதையில் பைக்கில் வந்த ஏட்டு.. ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த காவல்துறை
"வேகமாக பைக் ஓட்டுவதே தவறு.. இதில் மது அருந்திவிட்டு வேறு பைக் ஓட்டி வருகிறீர்களே.." என போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு அந்த தலைமைக் காவலர், போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நெல்லை: நெல்லையில் மது அருந்திவிட்டு பைக்கில் வந்த தலைமைக் காவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதத்தை போலீஸார் விதித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த 2019- ஆம் ஆண்டு மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது.
பல மாநிலங்களில் புதிய வாகன சட்டம் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திலும் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல மடங்கு அபராதம்
இந்த புதிய சட்டத்தின்படி, 46 வகையான போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. அதன்படி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது போன்றவற்றுக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

போலீஸ்னா மட்டும் விட்ருவீங்களா..
இந்த சட்டத்தின் கீழ் தற்போது அபாரதம் வசூலிக்கப்படுவதால் பல கோடி ரூபாய் அரசின் கஜானாவுக்கு செல்கிறது. இது ஒருபுறம் இருக்க, சில பகுதிகளில் மேற்கண்ட விதிமுறைகளை மீறி போலீஸார் சென்றால், அவர்களை கண்டுகொள்ளாமல் போக்குவரத்து போலீஸார் விட்டுவிடும் சம்பவங்களும் நடப்பதுண்டு. இதுதொடர்பாக பல வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஒரே இடத்தில் போக்குவரத்து விதிமீறலுக்காக நிறுத்தப்படும் இருவரில் ஒருவர், போலீஸ்காரராக இருக்கும்பட்சத்தில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சம்பவங்களை நாம் அதில் பார்த்திருப்போம். இதில் பல வாகன ஓட்டிகள், இதுதொடர்பாக போலீஸாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபடுவர். "எல்லோருக்கும் சட்டம் ஒன்னுதான சார்.. அவரை மட்டும் ஏன் விடுறீங்க" என பொதுமக்கள் கேள்வியெழுப்ப தொடங்கிவிட்டனர்.

போதை ஏட்டு
இந்நிலையில், நெல்லையில் நடந்த ஒரு சம்பவம் போலீஸாருக்கு சல்யூட் போட வைத்துள்ளது. நெல்லை சந்திப்பு பகுதியில் மாநகர போக்குவரத்து போலீஸார் நேற்று இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிக வேகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. இதையடுத்து, அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அவர் பாளை ஆயுதப்படை தலைமைக் காவலராக பணிபுரிவது தெரியவந்தது. மேலும், அவர் மதுபோதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.10 ஆயிரம் அபராதம்
இதையடுத்து, "வேகமாக பைக் ஓட்டுவதே தவறு.. இதில் மது அருந்திவிட்டு வேறு பைக் ஓட்டி வருகிறீர்களே.." என போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு அந்த தலைமைக் காவலர், போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றும் சூழல் உருவானதால், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தலைமைக் காவலரை மடக்கிப் பிடித்த போலீஸார், அவரை சந்திப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனிடையே, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications