ஜாதிய அடையாளங்களுடன் வந்தால் உடனே FIR.. நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தையொட்டி காவல்துறை எச்சரிக்கை!
நெல்லை: நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுடன் யாரும் வரக்கூடாது, ஜாதி ரீதியான கொடிகள், பனியன்கள் அணிந்து வரக்கூடாது என நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயில் உள்ளது. இங்கு ஆனி பெருந்திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறும்.

அந்த நேரத்தில் 570 டன் எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர்கள் பக்தர்களால் நான்காவது வீதிகளிலும் இழுத்து வரப்படும். இந்த ஆண்டு தேரோட்டம் வரும் 8 ஆம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு ஜூலை 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். ஜூலை 8 ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுடன் வரக்கூடாது என நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஜாதி ரீதியான கொடிகள், பனியன்கள் அணிந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் அதேபோல் ஏதாவது செயல்பாடுகள் இருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படும். தேரோட்டத்திற்கு வருவோர் ஜாதி சம்பந்தமான பனியன், கொடிகள், பேண்ட்டுகள் அணிந்து வரக்கூடாது. 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!












Click it and Unblock the Notifications