நெல்லையில் கொடூரம்: +2 மாணவனை கட்டையால் அடித்த சக மாணவர்! சாதியை சொல்லி திட்டியதாக உறவினர்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவனை கட்டையால் அடித்து தாக்கிய சக மாணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே குடிநீர் குழாயில் தண்ணீர் குடிப்பதில் தகராறு ஏற்பட்டு சாதிப் பெயரைக் கூறி தாக்கியதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவேண்டும் என்பதே சமத்துவ சமூகத்தை காணத் துடிக்கும் அனைவரின் விருப்பமும். பள்ளிகளிலேயே மாணவர்கள் மத்தியில் சாதி ஏற்றத்தாழ்வுகளும், மோதல்களும் நிலவும் சூழல் தமிழத்தில் உள்ளது. இதனைக் களைய அரசும், ஆசிரியர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Nellai School Row Class 12 Student Assaulted Caste Abuse Alleged Over Drinking Water Dispute

எனினும், பள்ளிகளில் குறிப்பாக தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே சாதிய வேறுபாடு எழுந்து அவ்வப்போது விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான் நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் இதுபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது.

மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவனை கட்டையால் அடித்து தாக்கிய சக மாணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே குடிநீர் குழாயில் தண்ணீர் குடிப்பதில் தகராறு ஏற்பட்டு சாதிப் பெயரைக் கூறி தாக்கியதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாதி ரீதியிலான தாக்குதலால் தனது மகனை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக இருப்பதாக மாணவரின் தாயார் கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+