கொரோனா காலத்தில் சமூக தொண்டு.. உடல்களை நல்லடக்கம் செய்த நல்ல உள்ளத்திற்கு நெல்லை நட்சத்திர விருது

கொரோனா கொடுந்தொற்று காலத்தில் மக்களுக்கு சேவை செய்த சமூக ஆர்வலர் எஸ். அப்துல் கரீமுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: கொரோனா முதல் அலையில் சிறப்பாக சமூக சேவை ஆற்றிய சமுக ஆர்வலர் எஸ். அப்துல் கரீமுக்கு சிறந்த சமுக சேவைக்கான விருதான 'நெல்லை நட்சத்திரம்' என்ற விருது வழங்கப்பட்டது. விருதினை TDCCI நிர்வாகத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு மூலம் கனிக்கு வழங்கினார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா கொடுந்தொற்று காலத்தில் பலரும் வீட்டிற்குள் முடங்கியிருக்க ஒரு சிலர் மட்டுமே தைரியமாக வெளியில் வந்து மனதார சேவை செய்தனர். உணவு வழங்குதல், பண உதவி செய்தல், உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது என பலவித தொண்டாற்றினர்.

Nellai Star TDCCI Award for Social Volunteer in the Corona Period

நெல்லை மாவட்ட சேம்பர் ஆஃப் காமர்ஸ்சார்பாக கடந்த 2020ல் கொரோனா கால கட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஏழை எளிய மக்களின் 153 உடல்களை நல்லடக்கம் மற்றும் தகனம் செய்தல் ,ஆம்புலன்ஸ் சேவை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் என நெல்லை மாவட்டத்தில் சிறப்பாக சமூக சேவை ஆற்றிய நபர்களை அடையாளம் கண்டு நெல்லை மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் சார்பாக பாராட்டி சேவைக்கான விருதுகள் வழங்கட்டது.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் சிறப்பாக சமூக சேவை ஆற்றிய சமுக ஆர்வலர் எஸ். அப்துல் கரீமுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதான 'நெல்லை நட்சத்திரம்' என்ற விருது வழங்கபட்டது. விருதினை TDCCI நிர்வாகத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அவர்கள் மூலம் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்க மாவட்ட தலைவர் குணசிங் செல்லத்துரை,செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சமூகத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்யும் அனைவருமே நட்சத்திரங்கள்தான். ரியல் ஹீரோக்களுக்கு இதுபோன்ற விருதுகள் வழங்கப்படுவதால் கூடுதல் உற்சாகம் கிடைப்பதோடு அவர்களின் சேவைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்பது நிச்சயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+