பிரேமாவின் அழகில் சொக்கி போய்.. வில்லுப்பாட்டுக்காரம்மா மீது பிரேமம் ஆகி.. கண்ணீரில் மூழ்கிய ஜாய்ஸி
நெல்லை போலீசில் கணவன் மீது மனைவி புகார் அளித்துள்ளார்
நெல்லை: பிரேமாவின் அழகில் சொக்கி போனார் சுப்புராஜ்.. கட்டின மனைவியை தவிக்கவிட்டுவிட்டு, வில்லுப்பாட்டுக்கார பிரேமா மீது ஏற்பட்ட பிரேமத்தால், எசகுபிசகு வேலைகளில் இறங்கி உள்ளார் சுப்புராஜ்!
பெயர் சுப்புராஜ்.. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்.. வீரவநல்லூரில் குடியிருந்து வருகிறார்.. இவரது மனைவி ஜாய்ஸி. சுப்புராஜுக்கு ஜாய்ஸி சொந்தம்தான்.. உறவுக்கார பெண்.
மும்பையில் செட்டில் ஆனவர்கள்.. ஆனால் தமிழ் அவ்வளாக தெரியாது.. இருந்தாலும், ஜாய்ஸ் கொஞ்சம் வசதியானவர்.

மாமியார் வீடு
நெல்லையிலேயே சொந்தமாக வீடு, நிலபுலன் இருக்கவும் சுப்புராஜை கல்யாணம் செய்து வைத்தனர்.. இதனால் வீட்டோடு மாப்பிளையாக ஐக்கியமாகிவிட்டார் சுப்புராஜ். எந்த வேலை வெட்டிக்கும் போறது கிடையாதாம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாமியார் வீட்டில் சொகுசு மாப்பிள்ளையாகவே சுப்புராஜ் வாழ்ந்து வந்துள்ளார்.

பிரேமா
இவரது அதிகபட்ச வேலை, குழந்தைகளை ஸ்கூலில் கொண்டு போய் விட்டுவருவதுதான்.. அப்படி செல்லும்போதுதான், பிரேமாவை சந்தித்துள்ளார். பிரேமா கணவனை பிரிந்து வாழ்பவர். சுப்புராஜ் மகளின் ஃபிரண்டுடைய அம்மாதான் பிரேமா.. அதாவது 2 பேரும் பேரண்ட்ஸ்.. பிள்ளைகளை ஸ்கூலுக்கு அழைத்து வரும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வீடியோ
பிரேமா வில்லுப்பாட்டு பாடுபவராம்.. நிறைய டிக்டாக் வீடியோக்களையும் பதிவிட்டு உள்ளார்.. இதை பார்த்ததும் சுப்புராஜும் டிக்டாக்கிற்குள் நுழைந்துவிட்டார்.. 2 பேரும் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வந்துள்ளனர்,. நாளடைவில் பிரேமாவின் பிரேமத்தில் சுப்புராஜ் சொக்கிவிட்டார்.. ஒருகட்டத்தில் பிரேமா மீது ஏற்பட்ட லவ்-வால், ஜாய்ஸை ஏமாற்றி அவர் பெயரில் உள்ள சொத்தை பிரேமாவுக்கு எழுதி வைத்துவிட்டாராம்.. தமிழ் தெரியாத ஜாய்ஸ், சுப்புராஜ் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்தை போட்டு தந்துள்ளார்.

ஜாய்ஸ்
சொத்துக்களை ஆட்டைய போட்ட இந்த கள்ளக்காதல் ஜோடி, கன்னியாகுமரிக்கு வந்துவிட்டது.. கணவனும், வீடும், சொத்தையும் இழந்த ஜாய்ஸ்-க்கு பிறகுதான் விஷயம் புரிந்தது.. கண்ணீர், ஆவேசத்துடன், அம்பாசமுத்திரம் மகளிர் ஸ்டேஷனில் புகாரை தந்துள்ளார்.. ஆனால் விசாரணை தாமதமாகி வருவதாக தெரிகிறது.

விபச்சாரி
பிரேமாவுடன் தனிக்குடித்தனம் நடத்தி வரும் சுப்புராஜ், ஜாய்ஸ் போட்டோவை சோஷியல் மீடியாவில் போட்டு விபச்சாரி என்று குறிப்பிட்டு, அவரது செல்போனையும் பதிவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாய்ஸ், இன்னொரு புகாரையும் நெல்லை மாவட்ட எஸ்பியிடம் புகார் தந்துள்ளாராம்.. அது சம்பந்தமான விசாரணையும் நடக்கிறது. இந்த டிக்டாக் எத்தனை குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டுவந்துள்ளது? இந்த ஆப் இப்போது இல்லையென்றாலும், அது ஏற்படுத்திய பாதிப்பும், தாக்கமும் இன்னமும் நம்மைவிட்டு அகலவே இல்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications