"இன்னொருத்தனா".. கழட்டி விட்ட காதலி.. எகிறிய இளைஞன்.. காலேஜ் வாசலிலேயே நடந்த அந்த சம்பவம்!
இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்
நெல்லை: "நான் இருக்கும்போது இன்னொருத்தனா" என்று கழட்டி விட்ட காதலியின் காதலியின் கழுத்தை அறுத்தேவிட்டார் இளைஞர்.. காலேஜ் வாசலிலேயே இப்படி ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. பெயர் பாலகிருஷ்ணன்... பாளையங்கோட்டையில் உள்ள பிரபல அரசு உதவிபெறும் காலேஜில் படித்து முடித்தவர்..
அதே காலேஜில் படித்துவரும் நெல்லை டவுனை சேர்ந்த பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணும் இளைஞரை அதி தீவிரமாக காதலித்தார்.. ஒன்றரை வருட காதல் இது.. இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போட்டுவிட்டார்கள்.. காலேஜும் மூடப்பட்டுவிட்டது..

காதலி
அதனால் 2 பேரும் சரியாக சந்தித்து பேச முடியாத சூழல் வந்தது.. நாள் ஆக ஆக, இவர்களுக்கு இடையில் இருந்த நெருக்கம் குறைந்தது.. உறவில் விரிசல் வந்தது. இது பாலகிருஷ்ணனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. போன் செய்தாலும் அந்த பெண் எடுப்பதில்லை.. அதனால் நேரடியாகவே காதலி வீட்டுக்கு சென்று பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார்.. அதன்படி அவர் வீட்டிற்கும் சென்றார்.. ஆனால் வீட்டில் அந்த பெண்ணின் பெற்றோர் இருந்தனர்..

வார்னிங்
பாலகிருஷ்ணனை பார்த்ததுமே அவர்கள் கோபமாகி வார்ன் செய்து அனுப்பிவிட்டனர். இந்த சமயத்தில்தான், அந்த பெண் இன்னொரு இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.. இந்த விஷயம் கேள்விப்பட்டு, அதை பற்றி விசாரிப்பதற்காக, காதலியை தேடி மறுபடியும் அவர் வீட்டுக்கு சென்றார்..

கழுத்தறுப்பு
ஆனால், அவர் வீட்டில் இல்லை, காலேஜ் சென்றுவிட்டதாக தெரிந்ததும், உடனே அங்குகிளம்பி சென்றார்.. காலேஜ் கேட்டில் செக்யூரிட்டி இருந்தும், உள்ளே அத்துமீறி சென்றுள்ளார்.. அந்த பெண்ணை சந்தித்து, கேள்விப்பட்டது எல்லாம் உண்மைதானா என்று கேட்டுள்ளார். ஆனால், காதலியோ பாலகிருஷ்ணனிடம் பேசவே விரும்பவில்லை.. தவிர்த்தார்.. இதனால் மேலும் ஆத்திரமுற்ற பாலகிருஷ்ணன், கையில் வைத்திருந்த சின்ன சைஸ் பிளேடு வைத்து, காதலியின் கழுத்தை அறுத்து விட்டார்..

சிகிச்சை
இதில் தொண்டை பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது.. வலியால் அலறி துடிப்பதை பார்த்ததும் அங்கிருந்தோர் உடனடியாக மீட்டு அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. தப்பி ஓட முயன்ற பாலகிருஷ்ணனையும் பிடித்து பாளையங்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இப்போது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.. அந்த பெண் இப்போது சீரியஸாக இருக்கிறாராம்.. சிகிச்சை நடந்து வருகிறது...!
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications