பூமிகாதான் என் உசுரு.. எனக்கு வேணும்.. பிரிக்காதீங்க.. கமிஷனர் ஆபீசுக்கு ஓடி வந்த அருண் குமார்
திருநங்கையை மணந்த இளைஞர் பெற்றோர் மீது புகார் அளித்துள்ளார்
நெல்லை: "பூமிகாதான் எனக்கு வேணும்.. அவதான் என் உயிர்.. எங்களை பிரிச்சிடாதீங்க" என்று திருநங்கையை காதலித்து மணந்த இளைஞர் சேலம் கமிஷனர் ஆபீசில் தஞ்சம் அடைந்தார்!
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் பூமிகா. 27 வயதாகிறது. திருநங்கையான இவர், பிடெக்., படித்துள்ளார். நெல்லையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்யும்போது, எலக்ட்ரீஷியன் அருண்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நெருக்கம் ஆனது.. காதலாக மலர்ந்தது.. எப்படியோ வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் 3 வருட காதலுக்கு பின், 5 மாசத்துக்கு முன்பு நெல்லையில் ஒரு கோயிலில் வைத்து பூமிகாவுக்கு தாலி கட்டினார் அருண்குமார்.
விஷயம் வீட்டுக்கு தெரிந்து அருண்குமாரின் பெற்றோர் கொதித்து போய்விட்டனர். ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத அருண்குமார், நெல்லையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து பூமிகாவுடன் குடிபோனார். ஆனாலும், அருண்குமாரின் பெற்றோரும், சொந்தக்காரர்களும், பூமிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கொண்டே இருந்தனர்.
இதனால், நெல்லையை விட்டு காலி செய்து, சேலத்தை அடுத்துள்ள ஜாரி கொண்டலாம்பட்டியில் வந்து ஒரு வீடு எடுத்து தங்கினர். இதையடுத்து, சேலத்துக்கும் அருண்குமாரின் பெற்றோர் வந்துவிட்டனர். "என் பையனை விட்டுட்டு ஓடிப்போய்டு.. இல்லேன்னா கொன்றே புதைச்சிடுவோம்" என்று மீண்டும் மிரட்டல் விடுத்தனர்.
இப்படி ஒவ்வொரு ஊராக போனாலும் பின்னாடியே விரட்டி கொண்டு மிரட்டல் விடுத்ததால், அருண்குமார் சேலம் கமிஷனர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து மனு தந்தார். "பூமிகா இல்லாமல் வாழ முடியாது.. அவள்தான் என் மனைவி, என் பெற்றோர் எங்களை பிரிக்க நினைக்கிறார்கள்" என்று முறையிட்டார்.
இந்த மனு குறித்து விசாரிக்கும்படி சேலம் நகர மாநகர மகளிர் போலீசுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து, மகளிர் போலீசும் அருண்குமாரின் பெற்றோரிடம் போனில் பேசி எச்சரிக்கை செய்தனர். திரும்பவும் அவர்கள் 2 பேரையும் பிரிக்க நினைத்தால், கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்று சொன்னபிறகே இளம்தம்பதியினர் நிம்மதி ஆயினர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications