தமிழகத்திலேயே அதிக வயதான நெல்லையப்பர் கோயில் யானை! 40 ஆண்டாக ஓடியாடிய காந்திமதிக்கு நடந்தது என்ன?
நெல்லை: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக் குறைவால் இன்று காலை உயிரிழந்தது. இந்த யானைதான் தமிழகத்திலேயே அதிக வயதுடைய யானையாக கருதப்பட்டு வந்தது.
யானை என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் கோயில் யானைகளிடம் ஆசி வாங்குவது என்பது அந்த கடவுளே ஆசி கொடுத்தது போல் ஆகும். இந்த யானைகள் கோயில் திருவிழாக்களின் போது அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

இதை பார்க்கும் போது பெரியவர்களும் குழந்தைகளை போல் குதூகலமாகிவிடுவார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், நெல்லையப்பர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், புதுவை மணக்குல விநாயகர் கோயில்களில் எல்லாம் யானைகள் மக்களுடன் மக்களாகவே பழகி வருகின்றன.
இவை குழந்தையை போல் தலையாட்டியபடி நடப்பதும், செய்யும் சில சின்ன சேட்டைகளும் காண மனம் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி இன்று காலை எல்லாம் வல்ல அந்த சிவனின் அடி சேர்ந்துவிட்டது.
யானையின் இறப்பை தாங்க முடியாத பாகனும் பொதுமக்கள் உடலை சுற்றி கதறி அழுகிறார்கள். இந்த யானைக்கு என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாகவே காந்திமதி யானை மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்ததாம்.
இதற்கு கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு படுத்து தூங்கிய காந்திமதி அதிகாலை பாகன் வந்து எழுப்பிய போது நடக்க முடியாமல் போனது. அவர் எவ்வளவு முயற்சித்தும் அந்த யானையால் எழ முடியவில்லை.
இதையடுத்து கால்நடை மருத்துவர்களும் வனத்துறை மருத்துவர்களும் கோயிலுக்கு வந்து கிரேன் மூலம் காந்திமதி யானையை தூக்கி நிற்க வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அதற்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் இந்த யானை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.
தமிழகத்திலேயே பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயில் யானையும் ஒன்று. தென் தமிழகத்திற்கு சுற்றுலா செல்வோரும் நெல்லையப்பரை வணங்கிவிட்டு அங்குள்ள கடைகளில் அல்வா வாங்கி வருவார்கள். அது போல் சபரிமலை செல்வோரும் இந்த தலத்திற்கு வருகை தருகிறார்கள்.
கடந்த 1985 ஆம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் யானை ஒன்று நெல்லையப்பர் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அப்போது அந்த யானைக்கு 16 வயது இருந்தது. பெண் யானை என்பதால் இதற்கு நெல்லையப்பர் கோயிலின் அம்பாள் பெயரான காந்திமதி என பெயர் சூட்டப்பட்டது.
சுமார் 40 ஆண்டுகளாக நெல்லை பகுதி மக்களுடன் ஒன்றியிருந்த இந்த யானையின் இறப்பால் அப்பகுதி மக்கள் கதறி அழுகிறார்கள். மேலும் தமிழகத்திலேயே அதிக வயதான யானையாக காந்திமதி கருதப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து இருவர் பலியானதை அடுத்து நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த யானை வேலிகளால் ஆன ஒரு இடத்தில் போட்டு அடைக்கப்பட்டிருந்தது. அதற்கு வேளா வேளைக்கு உணவு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications