“டுவிஸ்ட்”.. பல் பிடுங்கிய விவகாரம்! முதல்நாள் விசாரணைக்கு யாருமே வரல! போலீஸ் பல்வீருக்கு ரிலாக்ஸ்
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள ஐஏஎஸ் அமுதா இன்று விசாரணையை தொடங்கிய நிலையில், வாக்குமூலம் அளிக்க பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட ஆஜராகவில்லை என அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ளது கல்லிடைக்குறிச்சி. இங்கு இருக்கும் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை போலீசார் பிடுங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்ட வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து தமிழ்நாடு அரசு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், "கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்.69/2023 என்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கிய அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக காவல் நிலை ஆணை 151-இன்கீழ் சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள 26.03.2023 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரால் உத்தரவிடப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில், பல்வீர்சிங், இ.கா.ப., அவர்கள் 29.03.2023 பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் அன்று உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த திரு. ராஜ்குமார், முதல்நிலைக் காவலர், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம், திரு.போகபூமன், காவலர், வி.கே.புரம் காவல்நிலையம், திரு.சந்திரசேகரன், காவல் ஆய்வாளர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம், திருமதி பி.ராஜகுமாரி, கல்லிடைக்குறிச்சி வட்டக் காவல் ஆய்வாளர், திரு. ஏ.பெருமாள், வி.கே.புரம் வட்டக் காவல் ஆய்வாளர், திரு.என்.சக்தி நடராஜன், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட சார்-ஆய்வாளர், திரு.எம்.சந்தானகுமார், தலைமைக் காவலர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம், திரு.வி.மணிகண்டன், முதல்நிலை காவலர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம் ஆகியோர் மேற்படி புகார்கள் தொடர்பாக, ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் 26.03.2023ஆம் நாளிட்ட உத்தரவிற்கிணங்க, சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு, தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 03.04.2023 அன்று சமர்ப்பித்துள்ளார். அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியரின் முதற்கட்ட விசாரணை அறிக்கை மற்றும் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் இந்நிகழ்வு தொடர்பாக ஓர் உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட 04.04.2023-ஆம் நாளிட்ட கடிதத்தின் மூலம் அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையினை ஏற்று. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில், தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.பல்வீர்சிங், இ.கா.ப., மீதும் மற்ற காவல் துறையினர் மீதும் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான விசாரணை மேற்கொள்ள திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்களை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக இன்று முதல் விசாரணை தொடங்கியது. வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் சிறப்பு அதிகாரி அமுதா விசாரணை நடத்துவதாக இருந்தார். பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளிக்காதவர்கள், கூடுதல் தகவல் அளிக்க விரும்புபவர்கள் சிறப்பு அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருந்தார்.
நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க முடியாவிட்டால் [email protected] என்ற ஈமெயில் முகவரிக்கு புகார் அனுப்பலாம் என்றும், 8248887233 ஆகிய எண்ணிலும் புகார் தெரிவிக்க ஆட்சியர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் அம்பாசமுத்திரம் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் எழுத்தர் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர். பாதிக்கப்பட்டவர்கள் யாமே ஆஜராகி வாக்குமூலம் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications