“நாங்க ஏன் அவசரமா கூட்டணியை அறிவிக்கணும்?” பிரஸ் மீட்டில் டென்ஷன் ஆன பிரேமலதா விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: "ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் கூட்டணியை இறுதி செய்யாத நிலையில் நாங்கள் மட்டும் ஏன் உடனே அறிவிக்க வேண்டும்? யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. யார் மதிப்பு கொடுப்பார்களோ, அந்த இடத்தில் தேமுதிக இருக்கும்" என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழலில், 4 முனைப் போட்டி நிலவும் சூழல் உள்ளது. தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க (ராமதாஸ் அணி), புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் கூட்டணியை முடிவு செய்து அறிவிக்கவில்லை. தே.மு.தி.க, ஆளுங்கட்சியான திமுக எதிர்க்கட்சியான அதிமுக என ஒரே நேரத்தில் இரு பக்கமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

DMDK

பிரேமலதா பேச்சு

இந்நிலையில் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்ற தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பத்திரிகை, ஊடகங்களை கடுமையாகச் சாடினார். கூட்டணி தொடர்பாக பரவி வரும் செய்திகளுக்கும் அவர் மறுப்பு தெரிவித்தார்.

பிரேமலதா பேசுகையில், "ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி, மத்தியில் ஆளும் கட்சி எதுவுமே கூட்டணி குறித்து இறுதியாக அறிவிக்காத நிலையில், நாங்கள் மட்டும் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏன்? யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. 2 பக்கமும் பேசுவதாக கூறுவது தவறு. அனுமானங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.

எனக்குத் தெரியும்

உங்கள் டிஆர்பி-யை உயர்த்துவதற்காக தவறான செய்திகளை சொல்ல வேண்டாம். தேமுதிக எனது குடும்பம். அதிலுள்ள என் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கட்சியின் தலைமை பொறுப்பில் தாயாக இருக்கும் எனக்கு தெரியும். இந்தக் கட்சியை நம்பி லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே யோசித்துத்தான் எதையும் முடிவு செய்ய முடியும். தொண்டர்கள் விரும்பும் வகையில் கூட்டணி அமையும்.

நல்ல நேரத்தில் முடிவு எடுக்கப்படும். 2026 தேர்தலில் சரித்திரம் படைப்போம். நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். பழுத்த மரம்தான் கல்லடிபடும் என்பார்கள். அப்படித்தான் இப்போது நிலைமை இருக்கிறது. எனவே, உங்களது செய்திகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை" என்று ஆவேசமாக தெரிவித்தார்.

மதிப்பு கொடுக்கும் இடத்தில் கூட்டணி

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் கோபமாகப் பேசினார் பிரேமலதா விஜயகாந்த். "தேர்தல் அறிவிக்க இன்னும் நாட்கள் உள்ளது. இன்னும் பிப்ரவரி மாதம் வரை காலம் இருக்கிறது. எனவே கூட்டணியை அறிவிப்பதில் கால தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் மதிப்பு கொடுப்பார்களோ, அந்த இடத்தில் தேமுதிக இருக்கும்.

தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான். பேசுவது, பழகுவது வேறு, அரசியலில் சேர்வது வேறு. இது எங்க கட்சி, எப்போது முடிவு எடுக்க வேண்டுமோ அப்போது முடிவு எடுத்து சொல்வோம். யாருடைய அவசரத்துக்கும் சொல்ல முடியாது எங்களுக்கு உரிய மரியாதை, எங்களுக்கு உரிய நியாயம் எங்கு கிடைக்கிறதோ அங்குதான் கூட்டணி." எனத் தெரிவித்தார்.

நாங்க மட்டும் உடனே அறிவிக்கணுமா?

கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் பிரேமலதா விஜயகாந்த் கோபமானார். "ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் கூட்டணியை இறுதி செய்யாத நிலையில் நாங்கள் மட்டும் ஏன் உடனே அறிவிக்க வேண்டும்? நாங்கள் எங்கள் குடும்பத்துக்குள் பேசுவதை எல்லாம் பொதுவெளியில் சொல்ல முடியாது. உங்கள் குடும்பத்தில் பேசுவதை எல்லாம் வெளியே சொல்வீர்களா?" என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+