திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பக்கோடோவில் எண்ணெய்யில் பொறித்த பல்லி.. ஸ்வீட் கடைக்குள் நுழைந்த அதிகாரிகள்.. நெல்லையில் பரபரப்பு

நெல்லை ஸ்வீட் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்

Google Oneindia Tamil News

நெல்லை: பக்கோடாவில் இறந்துபோன பல்லி இருந்துள்ளது.. இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நெல்லையில் இருந்த ஸ்வீட் கடைக்கு சென்று அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    பிரபல கடையின் பக்கோடாவில் பல்லி…. அதிகாரிகள் அதிரடி ஆய்வு… கடை மூடல்..!

    நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி அருகே தெற்கு பஜாரில், ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது... இங்கு நேற்று அதே பகுதியை சேர்ந்த ஒருவர், தன்னுடைய வீட்டிற்கு பக்கோடா வாங்கி உள்ளார்.

    எம் ஆர் விஜயபாஸ்கரை விடாது விரட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை - 8 மணி நேர விசாரணை... விரைவில் கைது? எம் ஆர் விஜயபாஸ்கரை விடாது விரட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை - 8 மணி நேர விசாரணை... விரைவில் கைது?

    அதை வீட்டுக்கு கொண்டு சென்று, ஒரு பாத்திரத்தில் பிரித்து கொட்டினார்.. அப்போதுதான், ஒரு பல்லி கிடப்பதை பார்த்தார்.. எண்ணெயில் பொறிந்த நிலையில் கிடந்தது அந்த பல்லி..

    பல்லி

    பல்லி

    இதை பார்த்து குடும்பத்தினர் மொத்த பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக இதுகுறித்து சென்னை உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ்-அப் மூலமாக சம்பந்தப்பட்ட நபர் புகார் தந்தார். இந்த வாட்ஸ்அப்பில் வந்த தகவல், சென்னை உணவு பாதுகாப்பு துறையினரின் பார்வைக்கு சென்றுள்ளது.. அவர்கள் உடனடியாக நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அதை மெசேஜ் அனுப்பி தகவல் தெரிவித்துள்ளனர்..

     ஷட்டர்கள்

    ஷட்டர்கள்

    பிறகு, நெல்லை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சசி தீபா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ் கடைக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான் கடையில் உள்ள ஸ்வீட்கள் எல்லாமே மூடி வைக்கப்படாமல் திறந்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பாதுகாப்பற்ற முறையிலும் அவைகள் இருந்துள்ளன. இதையடுத்து, ஷட்டர்களை சரி செய்து மூடி வைக்குமாறு அதிகாரிகள் கடை ஓனருக்கு அறிவுறுத்தினர்..

     எச்சரிக்கை

    எச்சரிக்கை

    அதற்கு பிறகு பிளாஸ்டிக் டப்பாக்களில் குலோப் ஜாமுன்கள், ரசகுல்லா போன்றவை இருந்தன.. ஆனால், அவைகளின் தயாரிப்பு தேதி காலாவதியாகி இருந்தது. இதையடுத்து அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்... பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து விற்கப்படும் ஸ்வீட்களுக்கு தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை அச்சிடுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.. இறுதியாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஜாங்கிரி, லட்டு போன்றவற்றை எடுத்து ஆய்வுக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தனர்...

     டெஸ்ட்டுகள்

    டெஸ்ட்டுகள்

    இந்த ஸ்வீட் கடை ஓனருக்கு இன்னொரு கிளை இருக்கிறதாம்.. இந்த கடைக்கு எதிரிலேயே இன்னொரு கடை வைத்துள்ளார்.. அந்த கடையிலும் இன்று ஆய்வு நடந்தது.. அங்குள்ள ஸ்வீட்களும் மாதிரி எடுக்கப்பட்டு டெஸ்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது... இந்த ரிப்போர்ட்கள் எல்லாம் வருவதற்கு 20 நாட்கள் ஆகும் என்கிறார்கள்.. மேலும் சம்பந்தப்பட்ட கடைகளை 24 மணி நேரம் அடைத்து சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் உத்தரவிட்டு சென்றுள்ளனர்.

    English summary
    Officers inspect in Tirunelveli Sweets shops and take actions
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X