அரசியல் தலைவர்களின் படங்களை கண்டதும் அகற்ற உத்தரவு.. களை கட்டும் தேர்தல் திருவிழா
நெல்லை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் கொடிகள், தலைவர் படங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கபட்டதைத்தொடர்ந்து தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளன. அரசு இயந்திரங்கள் தங்களது பணியை முடுக்கிவிட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள், உத்தரவுகள் உடனடி செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தென்காசி பாராளுமன்றத் தொகுதிக்குட்ப்பட்ட கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை க்கூட்டம் செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் புளியங்குடி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் கடையநல்லூர் வட்டாட்சியர் தங்கராஜ், செங்கோட்டை வட்டாட்சியர் வெங்கடேசன் கடையநல்லூர், செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், அச்சன்புதூர் காவல்துறை ஆய்வாளர் மனோகரன், உதவி ஆய்வாளர்கள் ஷியாம் சுந்தர், சங்கர், மாரீஸ்வரி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பேசும்போது, ஆங்காங்கே உள்ள அரசியல் கட்சிக்களின் கொடிக்கம்பங்களை அகற்றுதல்,அரசியல் சம்பந்தபட்ட விளம்பர போர்டுகளை கோவில் திருவிழா, திருமண, சடங்கு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதனை கண்டால் அகற்றவேண்டும். சுவர்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை காவல்துறையினருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் தெளிவுப்படுத்தினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications