Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோர்ட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த ராக்கெட் ராஜா! அக்யூஸ்ட்டுக்கு எதுக்கு ஆரவாரம்.. நீதிபதி கோபம்!?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பனங்காட்டு படை கட்சி தலைவரான ராக்கெட் ராஜா 2 கொலை மற்றும் பஸ்சை எரித்த ஒரு வழக்கு என 3 வழக்குகளில் ஆஜராக நெல்லை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து நேற்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆதரவாளர்கள் புடை சூழ நம்பர் பிளேட் இல்லாத காரில் ராக்கெட் ராஜா நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், நீதிபதி, ராக்கெட் ராஜாவுக்கு ஏன் இவ்வளவு ஆரவாரம் என அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் கடந்த 2009ம் ஆண்டில் காவலரை தாக்கிய வழக்கில், பங்களா சுரண்டையை சேர்ந்த கோழி அருள் என்பவர் உட்பட இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Rocket Raja Nellai Court

இவ்வழக்கில் கோழி அருளை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது தான் ராக்கெட் ராஜாவுடன் இருப்பதாக கூறினார்.

இத்தகவலின் பேரில் போலீசார் 20‌09-ஆம் ஆண்டு ராக்கெட் ராஜா வீட்டில் நடத்திய சோதனையில், அங்கு ராக்கெட் லாஞ்சரும்‌‌, ஏ.கே.47 ‌‌ரக‌ துப்பாக்கிகளுக்‌கு பயன்படுத்தக் கூடிய தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவருடைய வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததையடுத்து அவர் மீது ஆயுத பதுக்கல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜராக பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனர் ராக்கெட் ராஜா தென்காசி முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி ராஜவேலு முன்பாக ஆஜர் செய்யப்பட்டார். மேலும் 2 கொலை மற்றும் பஸ்சை எரித்து ஒரு வழக்கு என 3 வழக்குகளில் நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜா ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுருந்தது. இந்த உத்தரவை அடுத்து நேற்று நெல்லை ராக்கெட் ராஜா தனது ஆதரவாளர்கள், மற்றும் வழக்கறிஞர்களுடன் காலை 10 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ராக்கெட் ராஜா நீதிமன்றத்திற்கு வருவதையொட்டி துணை காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீதிமன்றத்திற்கு தனது தொண்டர்கள், வழக்கறிஞர்கள் படை சூல வருகை தந்த ராக்கெட் ராஜாவின் வழக்கு விசாரணைக்கு வருகின்ற ஐந்தாம் தேதி ஆஜராக முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். ராக்கெட் ராஜா வருவதை ஒட்டி நீதிமன்றம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது நம்பர் பிளேட் இல்லாத காரில் ராக்கெட் ராஜா வர, நான்கு கார்களில் அவரது ஆதரவாளர்கள் வந்தனர்.

தொடர்ந்து நீதிபதி முன்பு ராக்கெட் ராஜா ஆஜர் ஆனார். அப்போது நீதிமன்ற வருவதற்கு ஏன் இவ்வளவு கூட்டத்தோடு வருகிறீர்கள் எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தன்னுடன் வந்திருப்பவர்கள் தனது நண்பர்கள் என ராக்கெட் ராஜா கூறியிருக்கிறார். இதனால் சற்றே கோபமடைந்த நீதிபதி 'அக்கியூஸ்டுக்கு எதுக்கு இவ்வளவு ஆரவாரம்' என கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஓரமாக நில்லுங்கள் எனக் கூறிவிட்டு வேறு வழக்குகளை விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

நீதிமன்றத்திற்கு உள்ளேயே நீண்ட நேரம் ராக்கெட் ராஜா காத்திருந்தார். காலை 10 மணிக்கு அவர் ஆஜரான நிலையில் மதியம் ஒரு மணிக்கு மேலேயே அவர் வெளியே வந்தார். வரும்போது காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ராக்கெட் ராஜா செல்லும்போது காவல்துறையினர் ஒருவரை அமர வைத்துவிட்டு பின் சீட்டில் அமர்ந்து கொண்டார். தற்போது தமிழக முழுவதும் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் என்கவுண்டரை கையில் எடுத்துள்ளனர். மேலும் பழி வாங்கும் கொலை சம்பவங்களும் அதிகரித்து இருக்கிறது. இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலேயே ஆதரவாளர்களுடன் எப்போதும் ராக்கெட் ராஜா உலா வருவதாகக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+