பழிக்குப்பழி.. சுற்றி வளைத்த 10 பேர்.. நெல்லையில் போலீசின் தம்பி கொடூர கொலை.. திடுக்கிடும் சம்பவம்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் போலீஸ் ஒருவரின் தம்பி 10 நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை கேண்டின் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மக்தூம். இவரின் மகன் அங்கு போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். அங்கு இருக்கும் போலீஸ் குடியிருப்பில் மொத்த குடும்பமும் வசித்து வருகிறது.
இவரின் இன்னொரு மகன் அப்துல் காதரும் அதே வீட்டில் வசித்து வருகிறார். அப்பகுதியில் நண்பர்களுடன் இவர் குழுவாக சுற்றுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இவரின் குழுவிற்கும் சாத்தன் குளத்தில் இருக்கும் வேறு ஒரு குழுவிற்கும் இடையில் மோதல் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

மோதல்
இந்த நிலையில் அப்துல் காதர் நேற்று தனது நண்பர்களோடு சேர்ந்து இரவு நேரத்தில் சாலை ஓரம் மறைவாக இருந்த பகுதியில் நின்று மது அருந்திக்கொண்டு இருந்துள்ளார். 3 நண்பர்கள் வரை அங்கே இருந்துள்ளனர். அப்போது அந்த பகுதிக்கு முகத்தில் துணியால் மூடி மொத்தம் 10 பேர் வந்துள்ளனர். கையில் அரிவாள், கத்தி என்ற பயங்கர ஆயுதங்களோடு வந்துள்ளனர்.

ஓடினார்கள்
தங்களைத்தான் தாக்க வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டு போதையில் இருந்த அப்துல் காதர் உட்பட மூவரும் வேகமாக அங்கிருந்து ஓடி உள்ளனர். அவர்களை துரத்தி சென்ற அந்த 10 பேர் கொண்ட கும்பல் மற்றவர்களை விட்டுவிட்டு அப்துல் காதரை மட்டும் சுற்றி வளைத்து தாக்கி இருக்கிறார்கள். சரமாரியாக சுற்றி வளைத்து அங்கேயே அவரை கொன்றுள்ளனர்.

மரணம்
இதில் சம்பவ இடத்திலேயே அப்துல் காதர் பலியானார். இவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தற்போது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாளையங்கோட்டை போலீசார் இதில் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். சாத்தான்குளத்தில் நடந்த வேறு ஒரு கொலைக்கு பழி வாங்கும் விதமாக இவர் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை
பாளையங்கோட்டையில் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் இதற்கு பின் வேறு காரணம் உள்ளதா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.இவரின் அண்ணன் போலீஸ் என்பதால் அதன் காரணமாக எதாவது கும்பல் பழி வாங்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் 10 பேரையும் தீவிரமாக தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications