மண்டைக்கேறிய மதுபோதை.. மாணவியை ‘விருந்துக்கு’ அழைத்த செபாஸ்டியன்.! நெல்லையே கிறுகிறுத்து போச்சு!
நெல்லை: திருநெல்வேலியில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை இரவு நேரத்தில் தொடர்பு கொண்ட கல்லூரி பேராசிரியர் மது விருந்துக்கு அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் மாணவியின் பெற்றோர் புகாரை வாபஸ் பிரச்சனையில் விவகாரம் பெரிதானதையடுத்து அந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கிருஷ்ணகிரி கிங்ஸ்லின் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி பாலியல் தொல்லை, திருச்சி என்ஐடி விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவங்களின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் வால்பாறையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கல்வி கூடங்கள் பாலியல் தொல்லைக் கூடங்களாக மாறி வருவதாக பெற்றோர் மத்தியில் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், திருநெல்வேலியில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை இரவு நேரத்தில் தொடர்பு கொண்ட கல்லூரி பேராசிரியர் மது விருந்துக்கு அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாநகர பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை பட்டப் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் இரண்டு பேர் சம்பவத்தன்று இரவு, சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் செல் போனுக்கு கால் செய்துள்ளனர். அப்போது, அந்த கல்லூரி மாணவியிடம், 2 ஆசிரியர்களும் விரும்பத்தகாத வகையில் பேசியதோடு மது குடிப்பதற்கும் அழைத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த பெற்றோர் பாளை போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே மறுநாள் அந்த புகார் தொடர்பான விசாரணையை, போலீசார் தொடங்குவதற்குள் திரும்ப பெற்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தால், எனது மகளின் படிப்பு பாதிக்கப்பட்டு விடும். எனவே மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த புகார் மனுவை போலீசார் கிடப்பில் போட்டுவிட்டனர். மேலும், பேராசியர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர். இதனை, எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்ட போலீஸார் அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாணவியிடம் செல்போனில் பேராசிரியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படும் புகாரை, அவரது பெற்றோர்கள் திரும்ப பெற்று கொண்டு விட்டனர். யாராவது புகார் அளித்தால் தானே நாங்கள் விசாரிக்க முடியும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த நிலையில் மாணவியிடம் தகாத முறையில் பேசிய பேராசிரியர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஊடகங்களையும் இது தொடர்பாக செய்தி வெளியான நிலையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து விவகாரம் பெரிதானதை உணர்ந்த கல்லூரி நிர்வாகம் இரு பேராசிரியர்களை டிஸ்மிஸ் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவிக்கு போன் செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததோடு மது அருந்த அழைத்த பேராசிரியரான செபாஸ்டின் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு பேராசிரியரை தேடி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் பல்வேறு வகையான பிரச்சனைகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications