அமைச்சருடன் வாக்குவாதம்... புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கைது
நெல்லை: நாங்குநேரியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சி ஒன்றியச்செயலாளர் தளவாய் பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளிப்படையாகவே அறிவித்துவிட்ட நிலையில், அதிமுகவினர் சிலர் கிருஷ்ணசாமி படம் இடம்பெற்ற துண்டறிக்கைகளை நாங்குநேரியில் விநியோகித்து உள்ளனர். இதனைப் பார்த்து கோபமடைந்த புதிய தமிழகம் கட்சியினர் ஆதரவு இல்லை என கூறியும், எப்படி கிருஷ்ணசாமி படத்தை பயன்படுத்தலாம் என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று மூலக்கரைப்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிருஷ்ணசாமி படம் இடம்பெற்றிருந்து துண்டறிக்கையை விநியோகித்து அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு வாக்கு சேகரித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த புதிய தமிழகம் கட்சி ஒன்றியச்செயலாளர் தளவாய் பாண்டியன், அமைச்சரை வழிமறித்து ஆவேசமாக பேசினார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அதிமுகவினரும், அமைச்சரும் ஒரு நிமிசம் ஆடிப்போய்விட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அங்கு வந்து தளவாய்பாண்டியனிடம் பேசி அனுப்பிவைத்தனர். இதனிடையே அமைச்சரை வழிமறித்து தகராறு செய்ததாக கூறி தளவாய் பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச்சம்பவம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை கொதிப்படைய செய்துள்ளது. இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது அதிமுகவுக்கு அழகல்ல என கிருஷ்ணசாமி ஆவேசப்பட்டுள்ளார். மேலும், கைது நடவடிக்கை மூலம் உங்களுக்கு தான் தேர்தலில் பின்னடைவு ஏற்படும் எனக் கூறி அதிமுகவினரை அதிரவைத்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications