முடியல சார்.. ஹெலிகாப்டரே கைவிரித்த சோகம்! கண்முன் விழுந்த பாறைகள்.. நெல்லை குவாரியில் என்ன நடந்தது?
திருநெல்வேலி: திருநெல்வேலி குவாரி விபத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள நேற்று ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்ட போதும் கூட உள்ளே சிக்கி இருந்த ஊழியர்களை மீட்க முடியவில்லை.
Recommended Video
திருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளத்திலுள்ள அந்த தனியார் கல்குவாரியில் விபத்து ஏற்பட்டது. பாறைகள் திடீரென உடைந்து குவாரி உள்ளே விழுந்ததில் கொடூரமான விபத்து ஏற்பட்டது.
300 அடி ஆழத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த 6 பேர் இந்த விபத்தில் சிக்கினார்கள். இதுவரை 2 பேர் இங்கு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இன்னும் 3 பேரை மீட்கும் போராட்டம் நடந்து வருகிறது.

குவாரி
இந்த நிலையில் குவாரியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள நேற்று ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்ட போதும் கூட உள்ளே சிக்கி இருந்த ஊழியர்களை மீட்க முடியவில்லை. ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி உள்ளே இறங்கி, ஊழியர்களை அதில் கட்டி தூக்கலாம் என்ற முயற்சி எடுக்கப்பட்டது. இதற்காக ராமேஸ்வரம் ஐஎன்எஸ் பருந்துபடை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டது.

ஹெலிகாப்டர்
ஆனால் ஹெலிகாப்டர் மூலம் கீழே சிக்கி இருந்தவர்களை மீட்க முடியவில்லை. பாறைகள் பெரிதாக இருந்ததால் அதை ஹெலிகாப்டர் வைத்து அகற்ற முடியவில்லை. பாறைகளை அகற்றினால்தான் உள்ளே இருப்பவர்களை தூக்க முடியும். இதனால் ஹெலிகாப்டர் வந்தும் பயன் அளிக்கவில்லை. இதையடுத்து மீட்பு பணிகளை செய்ய முடியாததால் ஹெலிகாப்டர் திரும்பி சென்றது.

நெல்லை குவாரி
இதையடுத்து நெல்லை குவாரி விபத்தில் 300 அடி பள்ளம் என்பதால் ஊழியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் நேற்று மீட்பு பணிகள் செய்யப்படவில்லை. அதோடு சரியாக நேற்று மீட்பு பணிகள் செய்யும் நேரத்தில் கண் முன்னே பாறைகள் விழுந்தன. இதனால் உள்ளே இருந்த அதிகாரிகள் அலறி அடித்து ஓடினர். இதனால் தற்காலிகமாக நேற்று மாலையில் இருந்து மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

மேலாண்மை அதிகாரிகள்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இன்று குவாரிக்கு வருகிறார்கள். அவர்கள் மூலம் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் ஆழம் தோண்டப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 90 அடி வரை தோண்ட அனுமதி பெற்றுவிட்டு 300 அடிக்கும் கீழே தோண்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

விபத்திற்கு காரணம்
இதுவே விபத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது வரை நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்குவாரி உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 4 பேர் மீது முன்னிர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முழுமையான அனுமதி இன்றி குவாரி பணிகளை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications