ஸ்டாலினுக்கு சோனியா அனுப்பிய மெசேஜ்! உடனே நெல்லைக்கு அனுப்பப்பட்ட அனிதா! நயினாருக்கு கிடுக்குப்பிடி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வேட்பாளராக களமிறங்குவதால் அங்கே திமுக கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் முக்கியமான பிரம்மாஸ்திரம் ஒன்றை நெல்லையில் கையில் எடுத்துள்ளாராம்.

கடந்த வாரம்தான் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. பாஜக எம்எல்ஏவாக உள்ள நயினார் நாகேந்திரன் நெல்லை லோக்சபா தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.

Robert Bruce vs Nainar Nagendran What is the current state in Thirunelveli Lok Sabha elections

இதில் நெல்லை எம்எல்ஏவாக நயினார் நாகேந்திரன் உள்ளார். ஆலங்குளம் (எம்எல்ஏ பெயர்மனோஜ் பாண்டியன்), அம்பாசமுத்திரத்தில் (இசக்கி சுப்பையா) அதிமுக வசம் உள்ள நிலையில் பாளையங்கோட்டை (அப்துல் வஹாப்), ராதாபுரம் (சபாநாயகர் அப்பாவு) சட்டசபை தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் உள்ளன. நாங்குநேரியில் (ரூபி மனோகரன்) மட்டும் காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளார்.

இங்கே கொஞ்சம் பாஜகவிற்கு ஆதரவான சூழ்நிலை உள்ளது. காரணம் அதிமுகவிற்கு எதிராக முக்குலத்தோர் வாக்குகள் செல்லும். திமுக அங்கே நிற்காமல் காங்கிரஸ் கட்சியை களமிறக்கி உள்ளது பாஜகவிற்கு ஆதரவாக மாறும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

வெளியூர் ஆள்; காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ராபர்ட் புரூஸ். வழக்கறிஞரான ராபர்ட் புரூஸ் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கட்சிப் பதவிகளில் இருந்துள்ளார் ராபர்ட் புரூஸ். 2015ஆம் ஆண்டு முதல் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். நெல்லை தொகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ராபர்ட் புரூஸுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குழப்பம்: ஆனால் ராபர்ட் புரூஸ் வெளியூர் ஆள் என்பதால் அவருக்கு உள்ளூர் காங்கிரஸ் தலைகள் வேலைகளை பார்ப்பது இல்லை என்கிறார்கள். திருநெல்வேலியில் ராபர்ட்க்கு ஆரம்பத்தில் யாரும் திமுகவிலிருந்து உதவி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ராபர்ட்டுக்கு ஆதரவாக எல்லா சர்ச்சுகளிலும் அவருக்கு ஓட்டு போட சொல்லி பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால் உள்ளூரில் காங்கிரஸ், திமுக வேலை செய்யாததால் அவருக்கு எதிராக சூழல் மாறும் நிலை இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் திருநெல்வேலி நிலை.. நேரடியாக சோனியா காதுக்கே சென்றுள்ளதாம். இதனால் சோனியா தரப்பில் இருந்தும் முதல்வர் ஸ்டாலினிடம் உதவி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திருநெல்வேலியில் திமுக கட்சியில் இருந்து யாரும் ராபர்ட்டுக்கு வேலை செய்யவில்லை என்று சொல்லியதால் சோனியா நேரடியாக ஸ்டாலினிடம் பேசினாராம். இதையடுத்தே அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடியை விட்டுவிட்டு திருநெல்வேலியை நோக்கி செல்ல ஸ்டாலின் உத்தரவிட்டாராம். அங்கே வேலைகளை பார்க்க சொல்லி உத்தரவிட்டு இருக்கிறாராம்.

இதையடுத்து அனிதா ராதாகிருஷ்னன் இப்போது திருநெல்வேலியில் எல்லா தலைவர்களையும் கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்தி ராபர்ட்டை ஜெயிக்க வைப்பதற்காக வேலைகள் தீவிரமாக நடத்தி கொண்டிருக்கிறாராம்.

அதனால் காங்கிரசுக்கு தொடக்கத்தில் பின்னடைவாக இருந்த திருநெல்வேலியில் தற்போது சூழ்நிலை கொஞ்சம் சாதகமாக மாறி உள்ளதாம். அதிமுக சார்பாக இங்கே ஜான்சி ராணி வேறு போட்டியிடுவதால் எதிர்க்கட்சிகள் வாக்குகள் பிரிந்து திமுக கூட்டணிக்கு சாதகமாக நிலை மாறலாம் என்கிறார்கள். இப்போதைக்கு காங்கிரஸ் கையே இங்கு ஓங்கி இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+