இது என் கட்சி! நீ வெளியே போ! நிர்வாகிகளை ஒருமையில் பேசி அவமானப்படுத்திய சீமான்! கூட்டத்தில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை நாதக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சீமானிடம் வாக்குவாதம் செய்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

நெல்லை நாதக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கூட்டத்தின்போது செல்போன்கள் வைத்திருக்கக்கூடாது என அவற்றை வாங்கி வைத்துக் கொண்டதாகவும் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

seeman naam tamilar katchi vijay politics

நெல்லை மாவட்ட நாதக இளைஞரணி தலைவர் பர்வீன் தன்னுடைய கருத்துகளை பேச அனுமதி கேட்டபோது அவரை சீமான் அனுமதிக்கவில்லை. நீயெல்லாம் பேச கூடாது இங்கே என்று கூறி ஆவணப்படுத்தி இருக்கிறார். அதோடு அவரை சீமான் ஒருமையில் பேசி வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பர்வீனின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கே சலசலப்பு ஏற்பட்டது.

இது குறித்து பர்வீன் பேசுகையில்.. நான் 8 வருடமாக கட்சியில் இருக்கிறேன். பொறுப்பிலும் இருக்கிறேன். ஆனால் எங்களை பேச விடவில்லை. நீயெல்லாம் பேச கூடாது இங்கே என்று கூறி ஆவணப்படுத்தி இருக்கிறார். மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் பின்னர் எதற்கு நடத்துகிறார்கள். நீயெல்லாம் பேசுவதற்கு யார் என்கிறார்.

நான்தான் இங்கே பொறுப்பு ஏஜென்ட். நான்தன 8 தொகுதிகளில் வார்டு வாரியாக வேலை பார்த்தேன். உனக்கும் கட்சிக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது.. வெளியே போடா.. நீ இருக்கனும் என்றால் இரு.. வெளியே போடா.. இது என் கட்சி என்றார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் பேச முயன்றேன். நான் கட்சி நிர்வாகிகள் சிலர் எங்களை அடிக்க வந்தனர்.

நீயெல்லாம் பேசுவதற்கு யார்.. நீ ஜாதி ரீதியாக பேசுகிறாய் என்றார்.. நான் அதை பற்றித்தான் விளக்கம் கொடுக்க வருகிறேன் என்று சொன்னான். ஆனால் சீமான் கேட்கவில்லை. வெளியே போடா.. நீ இருக்கனும் என்றால் இரு.. வெளியே போடா.. அதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது. சொல்ல முடியாது. எனக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதனால் அங்கிருந்து வெளியேறிவிட்டேன், என்றார் நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் தமிழரில் இருந்து பலர் வெளியேறி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சி பெரிய பிளவை சந்தித்தது. தற்போது மீண்டும் நாம் தமிழரின் அஸ்திவாரம் ஆட தொடங்கி உள்ளது. அந்த கட்சியில் மீண்டும் கட்சி மாறும் படலம் தொடங்கி உள்ளது.

அதன்படி முதல் ஆளாக கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் அண்மையில் அறிவித்தனர். இதுதான் நாம் தமிழர் கட்சியின் பிரிவினைக்கு தொடக்க புள்ளியாக இருக்காது.

அதைத்தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் சுகுமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது கட்சியில் மேலும் பிரச்னையை ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள் யாரையும் தடுத்து நிறுத்த நாம் தமிழர் கட்சியின் சீமான் நினைக்கவில்லை. போனால் போகட்டும்.. கட்சி யாரையும் நம்பி இல்லை என்று சீமான் கூறியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+