புறம்போக்கு நிலம்.. பட்டா மாற்ற ரூ.10 லட்சம்.. மலைத்த மதுரை நபர்.. நெல்லை வளர்மதியை வளைத்த ஆபீசர்ஸ்
திருநெல்வேலி: மதுரையைச் சேர்ந்தவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் என்று சொல்லி பண மோசடியில் ஈடுபட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த தலைமைக் காவலரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகராஜ்.. 41 வயதாகிறது.. இவர் திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சந்திப்பு போலீஸ் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ளது. அங்கு தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வளர்மதி: இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு, வளர்மதி என்ற பெண் முருகராஜுக்கு பழக்கமானார்.. வளர்மதிக்கு 40 வயதாகிறது.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர்.. ஒருகட்டத்தில் வளர்மதியும், முருகராஜூம் நெருக்கமானார்கள்.. பிறகு வளர்மதிக்காகவே, நெல்லையிலேயே வாடகைக்கு வீடும் எடுத்து கொடுத்துள்ளார் முருகராஜ்.
ஆனால், முருகராஜூக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது. இதற்காக வளர்மதியை கருவியாக பயன்படுத்த முடிவு செய்தார்... அதன்படி, தன்னை ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் என்று பலரிடம் சொல்லி, பண மோசடியில் இறங்கினார் வளர்மதி.. நிலத்துக்கு பட்டா வாங்கி தருவதற்கும், அரசு வேலை வாங்கித்தருவதற்கும் லட்சக்கணக்கில் பணம் வாங்கி வந்துள்ளார்.. பணம் அதிகமாக புழங்கவும், இந்த மோசடியையே அதிகமாக செய்து வந்திருக்கிறது இந்த கள்ளக்காதல் ஜோடி.
புறம்போக்கு நிலம்: இந்த மோசடியில் இவர்களிடம் சிக்கியவர்கள்தான், மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சசிகுமார்.. 40 வயதாகிறது.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கி தர வேண்டும் என்பதற்காக வளர்மதியை அணுகியிருக்கிறார்..
இதற்கு வளர்மதி, ரூ.10 லட்சம் ரூபாய் கேட்டாராம்.... ஆனால் பல மாதங்கள் ஆகியும் பட்டா வாங்கி தராமல் இருந்துள்ளார்.. எனவே, தான் கொடுத்த பணத்தை வளர்மதியிடம் கேட்டுள்ளார் சசிகுமார்.. பணத்தையும் தராமல் இருந்துள்ளார் வளர்மதி.. இதனால், முருகராஜிடம் விஷயத்தை சொல்லி புலம்பியிருக்கிறார் சசிகுமார்... உடனே முருகராஜ் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சசிகுமாருக்கு தந்துள்ளார்.. ஆனால், அது பவுன்ஸ் ஆகி திரும்பிவந்துவிடடது.
அம்பலம்: இதற்கு பிறகுதான், இந்த 2 பேர்மீதும் சசிக்குமாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.. எனவே வளர்மதி குறித்து விசாரிக்க விசாரித்தபோது, அவர் மாவட்ட வருவாய் அலுவலர் என்பது வெட் வெளிச்சமானது.
ஹெட் கான்ஸ்டபிள் முருகராஜுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருவதும் உறுதியானது.. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிக்குமார், சந்திப்பு போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டனர்.. இறுதியில், வளர்மதி மற்றும் முருகராஜ் இருவரும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது அம்பலமானது.. இப்போது இந்த கள்ளக்காதல் ஜோடி சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறது. இவர்களிடம் ஏமாந்தவர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டை போலீஸார் தயாரித்து கொண்டிருக்கிறார்களாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications