நெல்லையில் காசு வைக்காமல் எதற்கு இத்தனை கேமரா.. கடிதம் எழுதிய திருடன் யார்? தீவிரமாக தேடும் போலீஸ்
நெல்லை: வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, அடுத்த தடவை என்ன மாதிரி திருட வந்தால் யாரும் ஏமாற வேண்டாம்.. காசு வைக்காமல் எதற்கு இத்தனை கேமரா.. போங்கடா வெண்ணைகளா, என்னை மன்னித்து விடுங்கள்.. இப்படிக்கு திருடன் என்று நெல்லையில் ஒரு வீட்டில் திருடப்போன திருடன் தனது ஏமாற்றத்தை வெளிப்படையாக கடிதம் மூலம் எழுதிவைத்துள்ளார். அத்துடன் போகும் போது சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்குகளை திருடி சென்றுள்ளார்.
திருடர்கள் சிலர், வீடுகளில் திருட போகும் போது, வடிவேலு சினிமா பட பாணியில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி சாப்பிட்ட திருடர்கள், சாப்பிட்ட காரணத்தாலேயே சிக்கியும் இருக்கிறார்கள். அதேபோல் சில திருடர்கள் மது அருந்திவிட்டு திருட செல்வார்கள் அப்படி செல்லும் போது, திருடி பின்னர், அசதியில் அங்கேயே தூக்கியிருக்கிறார்கள். சில திருடர்கள் போதையில் மயங்கியும் விழுந்து மாட்டியிருக்கிறார்கள்.

இன்னும் சில திருடர்கள் மிக நேர்மையாக பொருட்களை திருடிய மறுநாளே ஒப்படைத்துவிட்டு சென்றதும் நடந்துள்ளது. சிலர் திருடிய வீட்டின் வாசலில் வந்து பொருளை வைத்துவிட்டு செல்வதும் நடந்திருக்கிறது. சில திருடர்கள் திருடப்போன வீட்டில் பொருள் இல்லாமல் போனால் ஏமாற்றத்தை சந்திப்பதுடன், அதனை கடிதமாகவும் எழுதிவைப்பார்கள். அப்படியான சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.
நெல்லை பழைய பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் பாண்ட் என்பவர் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக மதுரைக்கு குடும்பத்தோடு சென்றுள்ளார். அப்போது வீட்டை உடைத்து வீட்டிற்குள் வந்த மரமானவர்கள் வீட்டிலிருந்த பீரோ மற்றும் பொருட்களை உடைத்து நகை பணம் உள்ளதா என்று தேடிப் பார்த்துள்ளார்கள். அப்போது வீட்டில் இருந்த உண்டியலை திருடி சென்றுள்ளனர். கடைசியாக வீட்டு உரிமையாளருக்கு திருடன் ஒரு நான்கு பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு சென்றார்.
அந்த கடிதத்தில், வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, அடுத்த தடவை என்ன மாதிரி திருட வந்தால் யாரும் ஏமாற வேண்டாம்.. காசு வைக்கவும் "காசு இல்லை.. எதற்கு இத்தனை கேமரா. போங்கடா வெண்ணைகளா என்னை மன்னித்து விடுங்கள், இப்படிக்கு திருடன் என எழுதி வைத்த சம்பவம் திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் ஹார்ட் டிஸ்கையும் திருடன் திருடிச் சென்றுள்ளார் இந்த சம்பவம் குறித்து நெல்லை பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications