சாதி ஆணவ படுகொலைகளுக்கு சனாதன தர்மமே காரணம்.. திருமாவளவன் ஆவேசம்!
நெல்லை: ஆணவ படுகொலைகளுக்கு சனாதன தர்மமே காரணம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சனாதன தர்மத்தின் அடிப்படையில் சாதி மாறி காதலித்தவர்களைப் படுகொலை செய்தனர் என்று கூறியுள்ள திருமாவளவன், சாதி விட்டு சாதி திருமணம் செய்வது குற்றம் என்று மனுதர்மம் சொல்வதாகவும் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின். சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவரான சுபாஷினி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்திற்கு தெரிய வர, கவினை நேரில் பேச அழைத்துள்ளார்.

அப்போது கவினை வெட்டிப் படுகொலை செய்த சுர்ஜித், நேராகக் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இவரின் பெற்றோர் இருவருமே காவல் உதவி ஆய்வாளர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் சுர்ஜித்தின் உடலை பெற்று கொள்ள அவரின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விசிக சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், தமிழ்நாட்டில் திராவிடத்தை எதிர்க்கக் கூடிய நபர்களால் தான் சாதிப் பெருமை உயர்த்தி பிடிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே சாதிய ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருகிறது.
சங்பரிவார் கும்பலுடன் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள் என தொடர்ந்து சொல்லி வருவது வருங்காலத்தையும் எதிர்காலத்தையும் பார்த்து கொள்வதற்காகத்தான். ஆணவ படுகொலைகளுக்குக் காரணமே சனாதன தர்மம் தான். சனாதன தர்மத்தின் அடிப்படையில் சாதி மாறி காதலித்தவர்களைப் படுகொலை செய்தனர். சாதி விட்டுச் சாதி திருமணம் செய்வது குற்றம் என்று மனுதர்மம் சொல்கிறது.
சங்கப் பரிவார் அமைப்புகளை வளர்த்துவிட்டால் நாளுக்கு ஒரு ஆணவ படுகொலை விழும். சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் வன்முறைகள் உத்திர பிரதேசம், பீகாரை போலத் தமிழகத்திலும் வெறியாட்டம் போடும். இந்தியா முழுவதும் சனாதன அரசியல் தகர்த்தெறியப்பட வேண்டும் அப்போதுதான் ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியும்.
சாதி மறுப்பு திருமணத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. ஒரே சாதியில் திருமணம் செய்வதை அரசியலமைப்பு சட்டத்தால் தடுக்க முடியவில்லை. இன்றும் நடைமுறையில் இருப்பது சனாதன தர்மம் தான். அரசியலமைப்பு சட்டம் அல்ல. ஆணவ படுகொலைகளுக்கு ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகள் தான் காரணம் என சொல்லிவிட்டு நகர்ந்து விட முடியாது.
யார் முதலமைச்சராக இருந்தாலும் தடுக்க முடியாது. நானே முதல்வரானால் கூட சாதிய வன்கொடுமைகளையும் ஆணவக் கொலைகளையும் கட்டுப்படுத்தி விட முடியாது, சமூகத்தில் இது போன்ற செயல்கள் தவறு என்பதைச் சொல்வதற்கான விழிப்புணர்வு இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை சொல்வதற்கு ஆட்கள் இல்லை.
அதனால்தான் மத்திய மாநில அரசுகள் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வரத் தயங்குகிறது. சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் போன்று ஆணவக் கொலைக்கு எதிரான தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தமிழக அரசிடம் கருத்துக் கேட்டது. இதனால் வரை தமிழகத்தில் இருந்த எந்த அரசும் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை.
ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டு வந்தால் தலித் அல்லாத நபர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என அச்சம் அவர்களுக்கு ஏற்படுகிறது. பாப்பாபட்டி கீரிப்பட்டி பகுதிகளில் தலித்துகள் ஊராட்சி மன்ற தலைவராக வருவதை எதிர்த்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தித் தேர்தலை திமுக அரசு நடத்தியது.அந்த துணிச்சலோடு ஆணவ படுகொலைகளைத் தடுப்பதற்குச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications