திருநெல்வேலி "மாஞ்சோலை"க்குள் யார்னு பாருங்க.. அதென்ன கழுத்தில்? கேஷூவலா அது பாட்டுக்கு போகுதாமே

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மாஞ்சோலை பகுதி மக்கள் நடுநடுங்கி போயுள்ளார்கள்.. இதையடுத்து, வனத்துறையினர் மாஞ்சோலை பகுதியிலேயே முகாமிட்டு, அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குட்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை, மிளா, காட்டுப்பன்றி, கரடி, யானை போன்ற பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

thirunelveli fantastic video and do you know who is this special guest in nellai Manjolai

மாஞ்சோலை: இதில் குறிப்பாக மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் நிறைய விலங்குகள் புகுந்துவிடும்.. இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, அங்கிருக்கும் வடக்குத்தி அம்மன் கோவிலுக்கு ஒரு சிறுத்தை வந்துள்ளது..

கோவிலின் வாசலிலேயே அந்த சிறுத்தை படுத்திருந்திருக்கிறது.. வெயிலுக்காக கோயில் வாசலில் தகர கொட்டகை போட்டிருந்ததும், அந்த நிழலுக்காக, சிறுத்தை வந்து ஹாயாக படுத்து கொண்டிருந்தது.. இதுதெரியாமல், பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றபோதுதான், சிறுத்தையை பார்த்து அலறியடித்து கொண்டு ஓடினார்கள்..

வாழை மரங்கள்: இப்போது மாஞ்சோலை வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை ஒன்று புகுந்துவிட்டது.. தொழிலாளர்களின் வீட்டு அருகில் வளர்த்து வந்த வாழை மரங்களை அந்த யானை சாய்த்து, வாழைத்தார்களையும் தின்று சேதப்படுத்தின. தங்கள் வீட்டு பக்கத்தில் யானை சுற்றி வருவதை பார்த்ததும், அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தகவல் தரப்படவும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் பக்கத்தில் அரிக்கொம்பன் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்த யானையின் கண்ணுக்கு மேலே மஸ்து இருக்கிறதாம்.. அது இருக்கும் வரை யானையின் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாகத்தான் இருக்குமாம்.. அதனால் தான் இப்படியெல்லாம் அட்டகாசம் செய்து வருவதாக சொல்கிறார்கள்..

நம்பிக்கை: இதுபோன்ற பாதிப்பு, வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே வருமாம்.. அதனை சரி செய்ய மருத்துவக்குழுவுக்கு பரிந்துரை செய்திருப்பதால், அதற்கு பிறகுதான், முண்டந்துறை அடர் வனப்பகுதிக்கு யானை விரட்டப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இப்போதைக்கு அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ கருவியை பொருத்தி, அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். எனினும், மாஞ்சோலை பகுதி மக்களுக்கு இன்னும் பயம் நீங்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+