திருநெல்வேலி காதல்.. கண் மட்டுமல்ல மூளையும் இல்லை 40 வயது காதலனுக்காக 16 வயது மாணவி செய்த செயல்
திருநெல்வேலி: காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. உண்மையில் சிலரது காதலுக்கு கண் மட்டுமல்ல, காது, இதயம், மூளை எதுவுமே இருப்பது இல்லை.. அதுவும் கள்ளக்காதலுக்கு மூளை சுத்தமாக வேலை செய்யாமல் மழுங்கிப்போய்விடுகிறது.. திருநெல்வேலியில் ஒரு 16 வயது பெண், சமூக வலைதளங்களில் பழகிய 40 வயது நபரை காதலித்துள்ளார். அவருடன் தான் செல்வேன் என்று செல்ல அடம்பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் செய்த வேலை கண்டு.. போலீசார் தலையிலேயே அடித்துக் கொண்டனர்.. இப்படியும் சமூக மாறிவிட்டதா என்ற அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் கண்டதையும் பார்க்கும் இளம் சிறார்கள், தவறான பாதையில் பயணிக்கிறார்கள். சமூக வலைதளங்களில் யாருடைய ரீல்ஸ்க்கு அதிக லைக் கிடைக்கிறது. யாருடைய ரீல்ஸ் அதிக ஷேர் ஆகிறது.யாருக்கு அதிக பாலேயர்கள் வருகிறார்கள் என்பது தான் உலகம் என்பது போல் பல சிறார்கள் மாறிவருகிறார்கள். இதற்கு இன்ஸ்டாஇன்புளுயன்சர்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள். அவர்களின் வருமானம், லைப் ஸ்டைல் போன்ற காரணங்களை கூறலாம்.

டீன் ஏஜ் பெண்கள்
இது ஒருபுறம் எனில் இன்ஸ்டாவில் வரும் நண்பர்களை நிஜநணபர்களாக பழகுகிறார்கள். அதிலும் 16 முதல் 20 வயது உடைய டீன் ஏஜ் பெண்கள் வாழ்க்கை துணையை இன்ஸ்டாவில் தேர்வு செய்கிறார்கள். இன்றைக்கு பல டீன் ஏஜ் பெண்களுக்கு இன்ஸ்டாவில் தான் காதல் அழைப்பு வருகிறது.
இன்ஸ்டாவில் காதல்
அதில் வரும் காதல் அழைப்பை தவறாக புரிந்து கொண்டு, தவறானநபரை வாழ்க்கை துணையாக தேர்வு செய்கிறார்கள்இளம் சிறார்கள்.. அப்படி வாழ்க்கை துணையை தேர்வு செய்த பின்னர், தாங்கள் செய்து தவறு என்று சொன்னாலும் ஏற்பது இல்லை.. எடுத்த முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அது தவறு வேண்டாம் என்றால், ஏற்க மறுத்து எந்த எல்லைக்கும் போகிறார்கள்.. அப்படித்தான் திருநெல்வேலியில் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையைச் சேர்ந்த 40 வயதாகும் முருகன் என்பவர் கேரளாவில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பத்தமடை பகுதியைச் சேர்ந்த 16 வயதாகும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் சமூகவலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளார்கள்.
போலீசில் புகார்
கடந்த 14-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பத்தமடை போலீஸ் நிலையத்தின் மாடியில் செயல்பட்டு வரும் சேரன்மாதேவி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி தனது காதலனுடன் திருச்செந்தூருக்கு சென்றதை கண்டுபிடித்தனர். போலீசார், மாணவியின் பெற்றோர் திருச்செந்தூருக்கு சென்றனர். அங்கிருந்த 2 பேரையும் அழைத்து வந்தனர்.
பஞ்சாயத்து
பின்னர் சேரன்மாதேவி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, மாணவி பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை. தனது காதலனை விட்டு பிரிந்துச்செல்ல மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார். எனினும் மாணவி மைனர் என்பதால் காப்பகத்தில் ஒப்படைக்க போவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
மாணவி செய்த செயல்
இதனால் விரக்தி அடைந்த மாணவி பிடிவாதமாக பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது 2 கால் மூட்டு பகுதியில் முறிவு ஏற்பட்டு, வலியால் துடித்தார். அங்கிருந்த அனைவரும் ஆடிப்போனார்கள். உடனடியாக அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனர். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோன்று அதே மாணவியை வெளியூர் அழைத்துச் சென்றது தொடர்பான போக்சோ வழக்கு நிலுவையில் இருக்கிறது. முருகனுக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் ஆனவர் என்று தெரிந்தும், மாணவி 40வயதாகும் முருகனுடன் தான் செல்வேன்என்று போலீஸ் ஸ்டேசனில் அடம் பிடித்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் 2 கே கிட்ஸ்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாடமாக உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications