திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்துமீறிய பாஜக "தலை".. இதை வச்சு கூட அரசியலா? குறுக்கே புகுந்த போலீஸ்.. கொந்தளித்த திமுக!என்னாச்சு

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் இன்று காலை போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.

மாநகராட்சிகளில் மாடுகள் சாலைகளில் நடக்க கூடாது என்ற விதி உள்ளது. சாலைகளில் மாடுகள் நடமாடினால் அதை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

அதே சமயம் சாலையோர மாடுகள் இல்லாமல் வீட்டு மாடுகள் சாலைகளில் நடமாடினாலும் அதை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஹெலிகாப்டரில் வரும் பிரதமருக்கு எதுக்கு கொடி கம்பம்? அடம் பிடித்த பாஜகவினர்.. போலீசார் வாக்குவாதம் ஹெலிகாப்டரில் வரும் பிரதமருக்கு எதுக்கு கொடி கம்பம்? அடம் பிடித்த பாஜகவினர்.. போலீசார் வாக்குவாதம்

சாலை மாடுகள்

சாலை மாடுகள்

சாலைகளில் மாடுகள் நடப்பது என்பது பல்வேறு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். முதல் விஷயம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதேபோல் சாலைகளில் மாடுகள் நிற்பதால் விபத்துக்கள் ஏற்படும். வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்படும். இதனால் வாகன ஓட்டிகள் பலியாகும் அபாயம் உள்ளது. அதே சமயம் மாடுகளும் பலியாகும் அபாயம் உள்ளது. இன்னொரு பக்கம் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் அவை ரோடுகளில் சாணம் போடும் வாய்ப்புகள் உள்ளன.

உத்தரவு

உத்தரவு

இதனால் சுகாதார கேடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதையடுத்தே சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த மாடுகளை கோசாலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்பின் இந்த மாடுகளை ஏலம் விடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னையில் இப்படி சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் பல ஏலம் விடப்பட்டன. மாடுகளை கவனிக்காமல் சாலையில் விட்ட போலீசாருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

 திருநெல்வேலி

திருநெல்வேலி

அதன்படியே திருநெல்வேலியில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்க உத்தரவிடப்பட்டது. சாலையில் பல மாடுகள் சுற்றித்திரிவதாக பல புகார்கள் வந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் மாடுகளை சாலையில் திரிய விட்டால் ஏலம் விடப்படும் என மாநகராட்சி மாடுகளின் ஓனர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதையும் மீறி சாலையில் பல மாடுகள் சுற்றி வந்தன. இதையடுத்து அந்த மாடுகள் பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டன. ஏலம் விடுவதற்காக மாடுகள் பிடித்து வைக்கப்பட்டன.

ஏலம்

ஏலம்

ஏலம் விடுவதற்காக இந்த மாடுகள் பிடிக்கப்பட்டு இருந்த நிலையில்தான் நெல்லை பாஜக தலைவர் தயா சங்கர் அந்த மாடுகளை அவிழ்த்துவிட்டார். இந்து கடவுளான மாடுகளை அசிங்கப்படுத்திவிட்டதாக கூறி அவர் மாடுகளை அவிழ்த்துவிட்டுள்ளார். இதையடுத்து அரசின் நடவடிக்கைகளில் அவர் தலையிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. திமுக நிர்வாகிகள், மாநகராட்சி நிர்வாகிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கு

வழக்கு

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மாநகர காவல்துறை தற்போது அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள், மாடுகளை பிடித்து ஏலம் விடுவதை மத அரசியலாக்க பாஜக நிர்வாகிகள் முயல்கிறார்கள். பாஜக இதை வைத்து கூட அரசியலாக்க பார்க்கிறது. மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் கைது இதை தேவையின்றி அரசியலாக்க பார்க்கிறார், என்று கூறி உள்ளனர். இதையடுத்தே தயா சங்கர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். தயா சங்கர் கைதை எதிர்த்து அவருக்கு ஆதரவாக பாஜக, மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் செய்து வருகின்றனர்.

English summary
Thirunveli BJP chief arretsed over releasing cow from the custody of Tamil Nadu police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X