பெண் நோயாளியின் 5 சவரன் தங்க நகையை பறித்து வாயில் விழுங்கி.. இனிமா தந்து.. நெல்லையில் யார்னு பாருங்க
நெல்லை: மருத்துவமனைக்குள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம், நகைகளை பறிக்கும் சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இத்தனைக்கும் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும், செக்யூரிட்டிகள், சிசிடிவி கேமராக்கள் என அனைத்துவிதமான பாதுகாப்புகள் இருந்த நிலையிலும், திருட்டு சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நெல்லையில் என்ன நடந்தது தெரியுமா?
2 மாதங்களுக்கு முன்பு சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. என்ன நடந்தது தெரியுமா?

சேத்துப்பட்டு, மங்களபுரம் பகுதியில் குடியிருந்து வருபவர் சுகந்தி. இவரது அம்மா ஷீலாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. எனவே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்... ஷீலாவை அருகிலிருந்து சுகந்தி கவனித்து கொண்டார்.
குண்டுமணிகள், தாலி
அப்போது, சம்பவத்தன்று இரவு சுகந்தி சாப்பாடு வாங்குவதற்காக வெளியில் சென்றார்... பிறகு திரும்பி வந்து பார்த்தபோது ஷீலா கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் எடையுள்ள தங்க குண்டு மணிகள், தாலியை காணவில்லை... அதுகுறித்து அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் சுகந்தி விசாரித்தார். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
எனவே, இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசில் சுகந்தி புகார் தந்தார்.. போலீசாரும் வழக்கு பதிந்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர் மயக்க நிலையிலிருந்த ஷீலாவின் கழுத்திலிருந்து தங்க நகைகளை திருடும் காட்சி பதிவாகியிருந்தது.
அன்னபாக்கியம் இப்ப ஜெயிலில்
இதையடுத்து போலீஸார் அந்தப் பெண் யார் என்ற விசாரணையை நடத்தினர்.. அந்த பெண்ணின் பெயர் அன்னபாக்கியம், சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அன்னபாக்கியத்தைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
அப்போது அவர், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளிக்கு உதவி செய்ய வந்தாராம்.. அப்போது ஷீலா அணிந்திருந்த தங்க நகைகளை பார்க்கவும், அதை திருட நினைத்ததாக போலீசில் கூறினார்.. இறுதியில் அன்னபாக்கியத்தை போலீஸார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்..
இந்த சம்பவம் போல நெல்லை மருத்துவமனையிலும் ஒரு திருட்டு சம்பவம் நடந்து பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டு பண்ணி வருகிறது.
5 சவரன் தங்க நகை
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பம்மாள்.. கணவரை இழந்த இவருக்கு தற்போது 80 வயதாகிறது.. மகன் சங்கர சுப்பிரமணியனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பம்மாளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.. எனவே குடும்பத்தினர், அவரை சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சுப்பம்மாளுக்கு சிகிச்சையும் நடந்து வருகிறது.
இந்நிலையில், அவரது கழுத்திலிருந்து சுமார் 5 பவுன் தங்க சங்கிலியை மருத்துவமனை ஊழியரான ராமர் என்பவர் பறித்துவிட்டதாக தெரிகிறது.. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பம்மாள் கத்தி கூச்சலிட்டார்.
பாத்ரூமுக்குள் ஓடிய ராமு
இதனால் நிலைகுலைந்த ராமு, என்ன செய்வதென்றே தெரியாமல், அங்கிருந்த பாத்ரூமுக்குள் ஓடிச்சென்றார்.. அதற்குள் அங்கிருந்த ஊழியர்கள் திரண்டு வந்தனர்.. ராமுவை பாத்ரூமுக்குள்ளேயே சுற்றி வளைத்து பிடித்து, வெளியே அழைத்து வந்தனர்.. நகை எங்கே என்று கேட்டதற்கு, வாயில் போட்டு விழுங்கி விட்டதாக சொன்னார்..
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் தந்தார்கள்.. சிறிது நேரத்தில் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்..
நெல்லை ராமருக்கு தந்த இனிமா
ராமர் உண்மையிலேயே தங்க நகையை வாயில் போட்டு விழுங்கிவிட்டது தெரியவந்தது. எனவே, ராமருக்கு இனிமா மருந்து தந்து, 5 பவுன் நகையை வெளியே எடுத்தனர்.. பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி ராமரை கைது செய்தனர்.
நெல்லை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவராம் இந்த 25 வயது ராமர்.. பெண் நோயாளியிடம் மருத்துவமனை ஊழியர் நகையை பறித்து வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications