நெல்லையில் சிக்கும் க்ளூ? காங். ஜெயக்குமார் வீட்டுக்கே போக போறாங்க! சிபிஐ-யால் திருநெல்வேலியில் பரபர
திருநெல்வேலி: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கான விசாரணை அவரது குடும்பத்தினரிடம் இன்று ஆரம்பமாகிறது.
நெல்லை மாவட்டம், திசையன்விளை கரைச்சுத்துபுதூரை சேர்ந்தவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங்.. 60 வயதாகிறது.. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த 2ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டர்..

மர்மம்: இதையடுத்து, தேடப்பட்ட சம்பவத்தில், கடந்த 4ம் தேதி, வீட்டை ஒட்டியிருக்கும் தோட்டத்திலேயே ஜெயக்குமார் இறந்து கிடந்தது தெரியவந்தது. எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.
இதையடுத்து, போலீசாரின் விசாரணை ஆரம்பமானது.. ஜெயக்குமார் எழுதி வைத்ததாக சொல்லப்படும் நபர்கள் குறித்து குடும்பத்தினர், உறவினர்கள். நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. ஆனாலும், இதுவரை எந்தவிதமான துப்பும் இதில் கிடைக்கவில்லை..
எதிர்க்கட்சிகள்: இதற்கு நடுவே எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தன. "ஜெயக்குமார் தனசிங்கின் கார் அவரது தோட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. அவரது உடலின் பெரும்பகுதி எரிக்கப்பட்டிருக்கிறது. அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். எனவே, இதுகுறித்த உண்மையை வெளிக்கொரண வேண்டுமானால், சிபிஐ வசம் வழக்கை ஒப்படையுங்கள்" என்றும் கோரிக்கைகள் வலுத்தன.
இதையடுத்து, தமிழக அரசின் அறிவுறுத்தலின்பேரில், ஜெயக்குமார் மர்ம மரணம் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து வழக்கின் எப்ஐஆர் ரிப்போர்ட், ஜெயக்குமாரின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் நெல்லை மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுவிட்டது..
ஆய்வு: சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணி இதுகுறித்து மர்ம மரணம் என (குற்ற எண் 2/2024) வழக்குப்பதிந்துள்ளார். முதற்கட்டமாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி சங்கர், டிஎஸ்பிகள் சிவகுமார், ராஜ்குமார் நவ்ரோஜ் ஆகியோரது தலைமையில் இன்ஸ்பெக்டர் உலகராணி மற்றும் போலீசார் கரைசுத்துப்புதூர் நேற்றைய தினம் சென்று அவரது உடல் கிடந்த தோட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
தடயவியல் துறையினரும் வந்து ஏற்கனவே சிக்கிய தடயங்கள் குறித்து விளக்கமளித்தனர். கடந்த ஒரு வாரமாக மழை பெய்ததால், பல இடங்களில் மண் நிரம்பியிருந்தது. அதனால், மண்வெட்டியால் தோண்டி பார்த்தார்கள்.. கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதி, வீடு, வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதிகளையும் பார்வையிட்டார்கள்.. வி.ஏ.ஓ உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது..
இன்று விசாரணை: இந்நிலையில், இன்றைய தினம், ஜெயக்குமாரின் தோட்ட காவலாளி முருகன், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த போகிறார்கள்.. அதுமட்டுமல்ல, ஜெயக்குமாரின் மரண வாக்குமூல கடிதங்களில் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பி, மறுபடியும் அவர்களை திட்டமிட்டிருக்கிறார்களாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications