விதைப்பையை நசுக்கியது..பல்லை பிடுங்கிய விவகாரம்.. பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு
திருநெல்வேலி: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்நிலையங்களில் விசாரணைக்கு சென்றவர்கள் பற்களை இழந்து வீடு திரும்பினர். அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணையின் போது பற்களை குறடு உள்ளிட்ட ஆயுதங்களால் பிடுங்கி எறிந்து சித்ரவதை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அத்துடன் இது தொடர்பான விசாரணை அதிகாரியாக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த வாரம் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே அவர் விசாரணையை முடித்துக் கொண்டு சென்னை கிளம்பினார்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ்க்கு எதிராக ஐபிஎசி செக்சன் 326 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் அவருடன் விசாரணை செய்த போலீசார் மீது விசாரணை கைதிகள் பற்களை அகற்றியதாகவும், இருவரின் விதைப்பைகளை நசுக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் 40க்கும் மேற்பட்டோரின் பல்லை உடைத்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சார் ஆட்சியர் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். அதில் சூர்யா மட்டும் திடீரென பல்டி அடித்து போலீஸ் அதிகாரி தனது பல்லை உடைக்கவில்லை, கீழே விழுந்து தான் பல் உடைந்ததாக பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ்க்கு எதிராக ஐபிஎசி செக்சன் 326 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் அவருடன் விசாரணை செய்த போலீசார் மீது விசாரணை கைதிகள் பற்களை அகற்றியதாகவும், இருவரின் விதைப்பைகளை நசுக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications