இப்படியும் ஒரு அதிசயமா? 3 குழந்தைக்கும் ஒரே நாளில் பிறந்தநாள்.. நெல்லையை நெகிழ வைத்த குடும்பம்
திருநெல்வெலி: திருநெல்வெலி பாளையங்கோட்டை பகுதியில் ஒட்டுமொத்த மருத்துவ உலகையுமே வியப்பில் ஆழ்த்திய ஒரு வரலாற்று பூர்வமான அபூர்வ நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொதுவாக ஒரே குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் வெவ்வேறு மாதங்களிலும், வெவ்வேறு தேதிகளிலும் பிறப்பதுதான் இயற்கை. ஆனால், பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்குப் பிறந்த மூன்று குழந்தைகளும் பல ஆண்டுகள் இடைவெளியில், ஒரே தேதியில் பிறந்து பிரம்மாண்டமான உலக சாதனையை படைத்துள்ளனர். அதை பற்றி விவரமாக பார்ப்போம்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெபர்சன் மற்றும் சீபா மனோஸ் தம்பதியினருக்கு ஜஹஸ்லேல் மனோஸ் என்ற மூத்த மகனும், ஜசானியா ஷரோன் மற்றும் ஜானியா செராபின் ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

திருநெல்வேலி மெடிக்கல் மிராகிள்
இந்த 3 குழந்தைகளும் முறையே 2015, 2017 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில், வெவ்வேறு வருடங்களில் பிறந்திருந்தாலும், அவர்கள் அனைவரின் பிறந்த நாள் தேதியும் ஜூன் 10ம் தேதி என்பதுதான் இதிலுள்ள ஆச்சரியமான விஷயமாகும்.. இந்த 3 குழந்தைகளுக்கும் கடந்த ஜூன் 10ம் தேதியன்று ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இந்த மூன்று குழந்தைகளுமே எந்தவிதமான நவீன மருத்துவக் கருத்தரித்தல் சிகிச்சையும் மேற்கொள்ளப்படாமல், முற்றிலும் இயற்கையான முறையில் கருத்தரிக்கப்பட்டு, சுகப்பிரசவம் மூலமாகவே பிறந்திருக்கிறார்கள்.. சிசேரியன் மூலமாகவோ அல்லது குறைப்பிரசவமாகவோ இல்லாமல், மூன்று குழந்தைகளும் இயற்கையான முறையில் ஒரே தேதியில் பிறந்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
3 பேருக்கும் ஒரே நாள் பிறந்தநாள்
இப்படியொரு ஆச்சரியமான நிகழ்வுக்கு மத்தியில் இன்னொரு அதிசயமும் இதில் நிகழ்ந்துள்ளது. இந்த மூன்று குழந்தைகள் பிறக்கும்போதும் பெருமாள்புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் ரமோலா ஜேனட் டயானா என்ற பெண் டாக்டர்தான் பிரசவம் பார்த்திருக்கிறார்.
ஒரே பெண்ணுக்கு வெவ்வேறு ஆண்டுகளில், ஒரே மருத்துவர் பிரசவம் பார்த்த நிகழ்வுகள் உலகில் பல இருக்கலாம். ஆனால், ஒரே பெண்ணுக்கு ஒரே தேதியில் மூன்று முறையும் ஒரே மருத்துவர் பிரசவம் பார்த்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. இதில் இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த மூன்று குழந்தைகளையும் இந்த உலகத்திற்கு கொண்டுவந்த மருத்துவர் ரமோலா ஜேனட் டயானாவின் பிறந்த நாளும் இதே ஜூன் 10ம் தேதிதான்.
ஸ்பெஷாலிட்டி நாள் இதுதான்
இந்த அரிய நிகழ்வை முறைப்படி உலக சாதனையாகப் பதிவு செய்வதற்காக யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய உலக சாதனை அமைப்புகளிடம் விண்ணப்பிக்கப்பட்டு, தற்போது அதற்கான அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இதற்கான உலக சாதனை விருது வழங்கும் நிகழ்ச்சி வருகிற ஜூன் 15ம் தேதியன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
பிறந்த மாதத்திலேயே உலகச் சாதனை பட்டத்தை இக்குடும்பம் பெறவுள்ள நிலையில், அந்த சாதனைப் பட்டத்தையும் ஜூன் 10ம் தேதியே வழங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கின்னஸ் சாதனை
இதேபோன்ற ஒரு அரிய உலக சாதனை ஏற்கனவே பாகிஸ்தானிலும் நிகழ்ந்துள்ளது. அங்கு ஒரு குடும்பத்தில் தந்தை, தாய் மற்றும் அவர்களின் ஏழு பிள்ளைகள் என மொத்தம் 9 பேரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி என்ற ஒரே தேதியில் பிறந்து கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளனர்.
அந்த தம்பதிக்குத் திருமணம் ஆன நாளும் அதே தேதிதான் என்பதும், அவர்களின் 7 குழந்தைகளில் 4 பேர் இரட்டைக் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கு இணையாக நெல்லையிலும் ஒரே தேதியில் மூன்று குழந்தைகள் பிறந்து சாதனைப் படைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது...!!
-
கோவை டு லண்டன் கார் ஓட்டிய மூகாம்பிகா ரத்தினம்! இன்று கமல் ஹாசனின் மநீம விட்டு வெளியேறிய மர்மம் என்ன -
அறிவாலய மியூசிக்கில் கலக்கிய சிலுவம்பாளையம் டான்ஸ்! திமுக, அதிமுகவை ஒரே வரியில் சாய்த்த தவெக -
சர்வேயர்கள் முதல் விஏஓ வரை.. நிலப் பட்டாவுக்கு லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடி கைது -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications