"அது" கிட்டயே ராத்திரியெல்லாம் நின்னுட்டு இருந்தாராம்.. நெல்லை காட்டுக்கு மகளை அழைத்து போன அப்பா.. ஆ
திருநெல்வேலி: ஒழுக்கக்கேடாக நடந்து கொள்ளும் தன் மகளின் நடத்தையை கண்டு கொந்தளித்து விட்டார் பெற்ற தந்தை.. இப்போது ஒரு உயிரே பறிபோய்விட்டது.
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ளது நடுவக்குறிச்சி என்ற பகுதி.. இங்கு வசித்து வருகிறார் கொம்பையா... இவர் ஒரு கட்டட தொழிலாளி ஆவார்.. மனைவி பெயர் முத்துப்பேச்சி. 12 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

தம்பதி: இந்நிலையில், கணவன் மனைவி இடையே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே தகராறு இருந்தது.. எனவே, முத்துப்பேச்சி கணவருடன் கோபித்துக் கொண்டு, தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.
நெல்லை - கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் உள்ள ஒரு நகரில், முத்துப்பேச்சியின் பெற்றோர் வசித்து வருகிறார்கள்.. முத்துப்பேச்சியின் அப்பா மாரியப்பன், பாளையங்கோட்டையில் இளநீர் கடையை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.
பெற்றோர்: அம்மா வீட்டுக்கு வந்த முத்துபேச்சி, தன்னுடைய சொந்தக்காரர் ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.. இந்த விஷயம் தெரிந்து மாரியப்பன், தன்னுடைய மகளை கண்டித்துள்ளார்.. ஆனாலும் முத்துபேச்சி, எதையும் காதில் வாங்காமல், கள்ளக்காதலை வளர்த்துள்ளதாக தெரிகிறது.
இதனால் கொந்தளித்துபோன தந்தை மகளை கொன்றுவிடலாம் என்று முடிவு செய்து, மேலப்பாட்டத்ததில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்லலாம் என்று சொல்லி, நேற்றிரவு முத்துப்பேச்சியை தன்னுடைய பைக்கில் அழைத்து வந்துள்ளார்.. பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு பைக்கை ஓட்டிவந்து நிறுத்தினார்.
இளநீர்: பைக்கிலிருந்து இளநீர் வெட்டும் அரிவாளை வெளியே எடுத்த மாரியப்பன், தன்னுடைய மகள் முத்துபேச்சியை வெட்ட போனார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துப்பேச்சி, சுதாரித்துக் கொண்டு, அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடினார்..
ஆனாலும் மாரியப்பன் விடவில்லை.. பின்னாடியே அரிவாளுடன் ஓடிச்சென்று, மகளின் தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.. இதற்கு பிறகு, பாளையங்கோட்டை தாலுகா போலீசுக்கும் அவரே தகவலை சொன்னதாக தெரிகிறது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தால், மகள் முத்துபேச்சியை கொலை செய்துவிட்டு, அங்கேயே பக்கத்திலேயே நின்றிருந்தாராம் மாரியப்பன்.
போஸ்ட் மார்ட்டம்: பிறகு முத்துபேச்சியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பனையும் அவரை கைது செய்து போலீசார் அழைத்து சென்று விசாரணையை மேற்கொண்டனர். போலீசாரிடம் வாக்குமூலத்தில் அனைத்தையும் சொல்லி உள்ளார் மாரிமுத்து.. இப்போது, அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications