திருநெல்வேலி தொகுதி: நெல்லை சீமையில் திராவிட கோட்டையில் காவி கொடியை பறக்க விடுவாரா நயினார்?
திருநெல்வேலி: திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் அதிமுக 7 முறை வென்றுள்ளது. இம்முறை பாஜகவின் நயினார் நாகேந்திரன் காவி கொடியை பறக்கவிடுவாரா என தொடக்கம் முதலே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திருநெல்வேலி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, , நாங்குனேரி, இராதாபுரம்.

திருநெல்வேலி லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 16,42,305; ஆண்கள்- 8,02,293; பெண்கள் 8,39,863; 3-ம் பாலினத்தவர்- 149
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
எசு. இராமசுப்பு(காங்கிரஸ்) 2,74,932
அண்ணாமலை(அதிமுக) 2,53,629
மைக்கேல் இராயப்பன்(தேமுதிக) 94,562
கரு. நாகராஜன்(பாஜக) 39,997
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:
கே. ஆர். பி. பிரபாகரன்(அதிமுக) 3,98,139
சி. தேவதாச சுந்தரம்(திமுக) 2,72,040
சிவனணைந்த பெருமாள்(தேமுதிக) 1,27,370
ராமசுப்பு(காங்கிரஸ்) 62,863
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:
எஸ். ஞானதிரவியம் (திமுக) 5,22,623
மனோஜ் பாண்டியன்(அதிமுக) 3,37,166
மைக்கேல் இராயப்பன்(அமமுக) 62,209
சத்யா(நாம் தமிழர் கட்சி) 49,898
வெண்ணிமலை (மக்கள் நீதி மய்யம்) 23,100
2024-ம் ஆண்டு களத்தில் நிற்பவர்கள்
ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்)
ஜான்சி ராணி (அதிமுக)
நயினார் நாகேந்திரன் (பாஜக)
சத்யா (நாம் தமிழர் கட்சி)
திருநெல்வேலி கள நிலவரம் என்ன: இத்தொகுதியில் 7 முறை அதிமுக வென்றுள்ளது. அதிமுக எம்பிக்களாக ஆலடி அருணா, கடம்பூர் ஜனார்த்தனம், பிஎச் பாண்டியனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தொகுதி. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது. 1991-ல் திமுகவின் மூத்த தலைவர் கேபி கந்தசாமி போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 1998-ல் நடிகர் சரத்குமார், திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்றார்.
திமுக, அதிமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் கணிசமான வாக்குகள் உள்ள தொகுதி. இம்முறை பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் களம் காண்கிறார். இதனால் இதுவும் நட்சத்திர தொகுதியாகி உள்ளது. தாமிரபரணி பிறந்து பாய்ந்தோடும் தொகுதி. மேற்கு தொடர்ச்சியும் வங்க கடலும் சங்கமிக்கிற தொகுதி. பெரும்பாலானவை கிராமப்புறங்கள்தான். பிரதான தொழில் விவசாயம், பீடித் தொழில். மழையை நம்பியே விவசாயம். தென் மாவட்டங்களில் திருநெல்வேலியும் தொழில் நகரமாக, தொழில் நுட்ப நகரமாக உருவெடுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications