Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநெல்வேலி சின்னதுரையை முள்கம்பால் அடித்தனரா? கல்யாண பத்திரிகை தரவந்த பழைய நண்பன்! பரபர நாங்குநேரி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும்நிலையில், இதில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.. இது தொடர்பான விசாரணையும் நடத்தி வருகிறார்கள். தற்போது சின்னதுரையின் வீட்டுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல, விசிக செயலாளர் இந்த நிகழ்வு குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார்.. அவை என்ன?

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி மகன் சின்னதுரை. கடந்த 2023-ம் ஆண்டு அரசு பள்ளியில் படித்தபோது, அதே பள்ளியில் படித்து வந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர் , சின்னதுரையை அவரது வீட்டினில் புகுந்து அரிவாளால் வெட்டினர்.

Tirunelveli nanguneri Chinna durai

இதைப்பார்த்து பதறிப்போன அவரது தங்கை, தடுக்க ஓடிவந்தார்.. ஆனால் அவரையும் அந்த கும்பல் வெட்டியது.. இதில் அண்ணன் தங்கை இருவருமே படுகாயமடைந்தனர்.. இருவருமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிறகு சிகிச்சைக்கு பிறகு, தன்னுடைய படிப்பை தொடர்ந்த சின்னதுரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 78 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார்.

மீண்டும் சின்னதுரை மீது தாக்குதல்

இந்நிலையில், நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. சின்னதுரையை ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு வரவழைத்து 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, நெல்லை மாநகர துணை ஆணையர் சாந்தாராம் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

அதாவது, நேற்று மாலை போலீசாருக்கு வந்த அவசர அழைப்பில்தான், மாணவன் சின்னதுரை மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.. அதற்கு பிறகே சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த சின்னதுரையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

காவல் உதவி ஆணையர்

இதுகுறித்து நெல்லை பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "சின்னதுரைக்கு பெரிய அளவில் காயம் இல்லை, சிறிய காயம் மட்டுமே. இன்னும் சற்று நேரத்தில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார். 4 பேர் அவரிடம் செல்போனை வழிப்பறி செய்துள்ளார்கள். பழைய நண்பர் என்று சொல்லி போன் மூலம் அழைத்து இந்த வழிப்பறியை நடத்தியிருக்கிறார்கள். அதாவது, நேரில் சந்தித்து கல்யாண பத்திரிக்கை தரவேண்டும் என்று சொல்லி சின்னதுரையை அழைத்திருக்கிறார்கள்.

சின்னதுரையுடன் மொபைல் ஆப்பில் பேசி பழகிய நபர்கள் தான், அவரை வரவழைத்துள்ளனர். சின்னதுரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பாஸ்வேர்டை மறந்துவிட்டதாக சொல்கிறார்.. தாக்குதல் நடத்தியவர்களை 2 தனி படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

அதேபோல, போலீசார் தரப்பிலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.. அதில், "சின்னத்துரை தற்போது திருமால் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு வணிகவியல் நிறுவன செயலாளர் (B.Com. - Corporate Secretaryship) துறையில் படித்து வருகிறார். நேற்று மாலை சுமார் 6.15 மணியளவில் தனது நண்பரை பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

நெல்லை அரசு மருத்துவமனை

இரவு சுமார் 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபரின் தொலைப்பேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்ட சின்னதுரை, மாவட்ட அறிவியல் மையம் அருகில் உள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தகவல் தெரிந்த காவல்துறையினர் சம்பவ இடம் சென்று வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னதுரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சின்னதுரையிடம் விசாரித்த பொழுது, தனது இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகில் உள்ள வசந்தம் நகர் விரிவாக்கப்பகுதிக்கு சென்றதாகவும், பின்னர் அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் சின்னதுரையிடம் பணம் கேட்டதாகவும் அவரிடம் பணம் இல்லாததால் அவரை கட்டையால் அடித்து வலதுகையில் காயம் ஏற்படுத்தி அவரிடம் இருந்த மொபைலை பறித்து சென்றதாகவும் தெரிவித்தார்.

பாஸ்வேர்ட் மறந்துவிட்டதாம்

மேலும், சின்னதுரையிடம் காவல்துறையினர் விசாரணைக்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் கேட்டபோது, தனக்கு மறந்துவிட்டதாக கூறினார். மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கேட்டபோது அதுவும் தனக்கு மறந்துவிட்டதாக கூறுகிறார். சின்னதுரையின் கையில் ஏற்பட்ட சிறிய காயத்திற்கு சிகிச்சை முடித்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிக சஜன் பராஜ்

அதேபோல, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சின்னதுரையை நேரில் சந்தித்து என்ன நடந்தது என்பதை விசிகவை சேர்ந்த சஜன் பராஜ் அதுதொடர்பாக விளக்கமாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "நாங்குநேரி சின்னத்துரை தாக்கப்பட்ட செய்தி கிடைத்ததும் திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் சந்தித்தேன். நலமாக இருக்கிறார்.

என்ன நடந்தது எனக் கேட்டதற்கு சின்னத்துரை அவர்கள் "இன்ஸ்டாகிராம் செயலியில் என்னோடு படித்த பழைய நண்பன் என ஒருவன் கூறினான். திருமண பத்திரிகை வழங்க வேண்டும் அதனால் இங்கே வா என்று அழைத்தான். அதனால் நான் வசந்தா நகர் சென்றேன். அப்போது ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

இரு சக்கர வாகனம்

அவன் யார் என்று தெரியாததால் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்ப முற்பட்ட போது மேலும் அங்கே மறைந்திருந்த மூன்று பேர் என்னை சூழ்ந்து கொண்டு முள்கம்பால் அடித்தனர்.கையில் அவர்கள் இரண்டு அரிவாளும் வைத்திருந்தனர். பக்கத்தில் இருந்த வீட்டுக்கு சென்று கதவைத் தட்டி உதவி கேட்டேன். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, போலீஸ் வந்து 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்." எனக் கூறினார்.

முள்கம்பால் அடித்ததில் ஏற்பட்ட காயத்தில் கையில் ஒரு தையல் போடப்பட்டிருக்கிறது. காலில் லேசான காயங்கள் இருக்கிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்று விட்டார். இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் அந்த கும்பலை தேடி வருகின்றனர். சில ஊடகங்களில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு வரவழைத்து தாக்கினர் என தவறான செய்தியை பரப்புகின்றனர்." என்று விசிக செயலாளர் சஜன் பராஜ் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+