நெல்லையில் பயங்கரம்.. வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் வெட்டிக்கொலை! 6 பேர் கும்பல் வெறிச்செயல்
நெல்லை: நெல்லை நாங்குநேரி அருகே வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் வெட்டி படு கொலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் மீது 6 பேர் கும்பலினர் பெட்ரோல் குண்டை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசாரிக்க சென்ற காவல்துறை வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை நாங்குநேரி அருகே பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள டீக்கடையில் வடமாநில தொழிலாளி ஜான் என்பவர் நின்று கொண்டிருந்தார். மேலும் சிலரும் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் 6 பேர் கும்பல் வந்தனர்.
திடீரென அவர்கள் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கிறார்கள். மேலும் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கிருந்த 5 பேரை வெட்டியுள்ளனர். இதில் ஜான் உள்பட 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றதாகவும், படுகாயமடைந்த மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த கொலையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கொலை தொடர்பாக விசாரிக்க சென்ற போலீஸ் வாகனம் மீதும் கல்வீசி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications