குற்றால அருவியில் அழையா விருந்தாளி.. அலறியடித்து ஓடிய பயணிகள்! இந்த உடும்பை பாருங்க

Subscribe to Oneindia Tamil

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு விழுந்ததால், அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடியுள்ளனர். விவரமறிந்த தீயணைப்புத்துறையினர் உடும்பை பத்திரமாக மீட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை ஓர் இயற்கை பொக்கிஷம் என்று சொல்லலாம். புலி, சிறுத்தை, யானை தொடங்கி பல வகையான பாம்புகள், பறவைகள், ஊர்வன உயிர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன. எனவே இந்த பகுதி உலகின் பல்லூர் அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்படுகிறது.

Courtallam Tamil Nadu tenkasi

தென்காசி மாவட்டத்தில் இந்த மலையின் ஓர் அங்கமாக உள்ள குற்றாலம் அருவி, மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழிலுக்கு எடுத்துக்காட்டு. குற்றாலம் அருவி நீர் மூலிகை கலந்தது என்பதால், உடலுக்கு நல்லது என்று பலரும் கருதுகின்றனர். எனவே இந்த அருவியில் குளிப்பதற்காகவே ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அப்படி இன்று காலை குளிக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மெயின் அருவியில் பயணிகள் குளித்துக்கொண்டிருந்தபோது, தண்ணீரில் அடித்துவரப்பட்ட ராட்சத உடும்பு பயணிகள் மேல் விழுந்திருக்கிறது. இதனை பார்த்த அவர்கள் அலறியடித்து ஓட, உடும்பு பயந்து போய் பாறை மீது ஏறியிருக்கிறது.

சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக அருவிக்கு வந்து, உடும்பை பத்திரமாக மீட்டிருக்கிறார்கள். பின்னர் அது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. எனவே, குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் தொடர்ந்து 5 நாட்கள் வரை பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

வழக்கமாக இதுபோன்ற மழை நேரங்களில் அருவியில் பாம்பு, உடும்பு போன்றவை அடித்துக்கொண்டு வருவது இயல்புதான். எனவே தற்போது உடும்பு விழுந்தது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.

இந்தியாவில் உடும்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உயிரினம். பார்ப்பதற்கு பெரிய சைஸ் பல்லி போன்று இருக்கும். பலமான கால்களும், நீளமான வாலுடனும் இருக்கும் இது சில நேரங்களில் சிறிய முதலை போன்றும் தெரியலாம். இந்தியா முழுவதும் மொத்தம் நான்கு வகை உடும்புகள் இருக்கின்றன. இவற்றில் தென்னிந்தியாவில் உள்ள உடும்புகள் வங்காள உடும்புகளாகும். சாம்பல், பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இந்த உடும்புகள் இருக்கும். குற்றாலத்தில் விழுந்ததும் இந்த வகை உடும்புதான்.

இவை அதிகபட்சமாக 2 மீட்டர் வரை வளரும். கோழி, சிறிய உயிரினங்கள், பறவைகளின் முட்டை, சிறிய பாம்புகள், எலிகள் ஆகியவற்றை இது உணவாக எடுத்துக்கொள்கிறது. இவை இறையை பார்த்தவுடன் வேகமாக சென்று வேட்டையாடும். அதற்கேற்ப இதன் கால்களும், வேகமாக போகும்போது திசையை மாற்ற, வலுவான வாலும் இதற்கு இருக்கிறது.

தமிழகத்தின் பல இடங்களிலம் இதை பார்க்க முடியும். இது வேளான் நிலத்தில் இருந்தால், எலிகளின் தொல்லை கட்டுக்குள் இருக்கும். இருப்பினும் உடும்பு பற்றி பல தவறான கருத்துக்கள் நம்மிடையே இருக்கின்றன. உடும்பு கடித்தால், சாகும் வரை பிடியை விடாது என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், அதெல்லாம் உண்மை இல்லை. அதேபோல, உடும்புக்கு விஷம் இல்லை என்று சொல்லப்படலாம். அதுவும் பொய். உடும்புகளுக்கு விஷம் இருக்கிறது. அது பாம்பு அளவுக்கு வீரியமானது கிடையாது. இருப்பினும் ஆபத்தானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+