நெல்லை கிணற்றில் 3 திருநங்கைகள்.. சாக்கு பையில் கட்டி கிணற்றுக்குள் வீசிய சம்பவம்!
நெல்லை : நெல்லையில் முன்விரோதம் காரணமாக 2 திருநங்கைகள் உட்பட 3 பேரை கொலை செய்து உடல்களை சாக்குகளில் கட்டி கிணற்றிற்குள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாளையங்கோட்டை நான்கு வழிச்சாலை அருகே கிணற்றில் கிடந்த 3 பேரின் உடல்களை மீட்ட போலீசார் இக்கொலைகள் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் சுமார் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகிறார்கள். இங்கு வசித்து வந்த பவானியை கடந்த சில நாள்களாக காணவில்லை. மேலும், அவர், மகாராஜா நகர் பகுதியில் உள்ள முருகன், அனுஷ்கா ஆகியோரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால், அங்கு முருகனும், அனுஷ்காவும் இல்லை. மேலும், அந்த வீட்டில் ரத்தக்கறை இருந்தது.

காணாமல் போன பவானி
இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்புவாசிகள், இது குறித்து சுத்தமல்லி போலீஸில் புகார் அளித்தனர். தங்களுக்கு சேலத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவருடன்தான் கடைசியாக பவானி சென்றதாகவும் கூறியிருக்கிறார்கள். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரிஷிகேஷ் உள்பட 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

போலீஸ் விசாரணை
விசாரணையில், பவானி, அனுஷ்கா, முருகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டதாகவும், மகாராஜ நகரில் உள்ள ஒரு வீட்டில் அவர்களின் உடலை போட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். உடனடியாக போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, அவர்கள் கூறியது போல் உடல்கள் எதுவும் இல்லை.

விரைந்த போலீஸ்
இதையடுத்து போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பவானி உள்ளிட்ட 3 பேரின் உடல்களை சாக்குமூட்டையில் கட்டி பாளையங்கோட்டை கக்கன்நகர் புறவழிச்சாலை அருகே உள்ள 2 கிணற்றில் போட்டதாக கூறியிருக்கிறார்கள். அதன்படி போலீஸார் அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, இரண்டு கிணற்றிலும் சாக்கு மூட்டைகள் மிதந்திருக்கின்றன.

கிணற்றில் மீட்பு
இதையடுத்து கிணற்றில் மிதந்த உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரிஷிகேஷ் உள்ளிட்ட 3பேரிடமும் ஏன் கொலை செய்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் இரண்டு திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. .
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications